Roston Chase.. வெஸ்ட் இண்டீஸ் Test அணிக்கு புதிய கேப்டன்.. 2 வருட கேப்புக்குப் பிறகு விளையாடுகிறார்!

May 16, 2025,07:05 PM IST
பார்படாஸ்: மேற்கு இந்தியத் தீவுகள் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஆல் ரவுண்டர் ராஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை கேப்டனாக இருந்து வந்த கிரேக் பிரத்வைட் அப்பொறுப்பிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகிய நிலையில் புதிய கேப்டனாகியுள்ளார் ராஸ்டன் சேஸ்.

ஆஸ்திரேலிய அணி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு வருகை தரவுள்ளது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அந்தத் தொடர்தான் கேப்டனாக ராஸ்டன் சேஸுக்கு முதல் தொடராகும். சேஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 49 போட்டிகள் ஆடியுள்ளார்.  அதேசமயம் அவர் கடைசியாக டெஸ்ட் போட்டியில் ஆடியது 2 ஆண்டுகளுக்கு முன்பு என்பது மிகவும் சுவாரஸ்யமான தகவல். இவ்வளவு கேப் விட்டு விட்ட நிலையில் தற்போது சேஸ் டெஸ்ட் அணிக்கு கேப்டனாகியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.



2016ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் சேஸ்.  இதுவரை 26.33 என்ற  சராசரியுடன் 2000க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார். இதில் 5 சதங்களும், 11 அரை சதங்களும் அடக்கம். 85 விக்கெட்களையும் அவர் வீழ்த்தியுள்ளார்.

தற்போது அயர்லாந்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஒரு நாள் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. அந்த அணியுடன் இணைந்து விளஐயாடி வருகிறார் ராஸ்டன் சேஸ்.  அயர்லாந்து தொடர் முடிந்ததும், இங்கிலாந்துக்கு எதிராக இந்த மாத இறுதியில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி விளையாடவுள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 25 முதல் 29ம் தேதி வரை பிரிஜ்டவுனில் நடைபெறும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்

news

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!

news

தகுதி நீக்கமா? ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

news

ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

news

தமிழ்நாடு எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

news

ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்

news

பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!

news

அரசியலுக்கு வரவா? வேண்டாமா?.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.. மக்களிடம் கேட்கும் ராகவா லாரன்ஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்