டில்லி : ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்காக மத்திய அரசு அளித்திருந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் இன்னும் ரூ.2000 நோட்டுக்களை மாற்றாதவர்களும் தங்களிடம் உள்ள நோட்டுக்களை மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது.
ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாக மத்திய அரசு ஜூன் மாதம் அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்கள் வங்கிக் கிளைகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்கில் முதலீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கு செப்டம்பர் 30 ம் தேதி வரை காலக் கெடு வழங்கப்பட்டதுடன், அது மேலும் நீட்டிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. இதனால் பலரும் தங்களிடம் இருந்த ரூ.2000 நோட்டுக்களை மாற்றி வந்தனர்.

ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கு மேலும் சில நாட்கள் அவகாசம் வேண்டும் என பலரும் கேட்டுக் கொண்டதால் இதற்கான கால அவகாரத்தை அக்டோபர் 07 வரை மத்திய ரிசர்வ் வங்கி நீட்டித்தது. இதன்படி ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதுவரை 80 சதவீதம் ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், இன்று ரூ.12,000 கோடி அளவிலான ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப வரவில்லை என்றும் ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
காலக் கெடு முடிந்து விட்ட நிலையில் ரூ.2000 நோட்டுக்களை நாளை முதல், அதாவது அக்டோபர் 08ம் தேதி முதல் ரூ.2000 நோட்டுக்களை மாற்ற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் படி,
* ஆர்பிஐ.,யின் 19 மண்டல அலுவலங்களில் ஏதாவது ஒன்றிற்கு நேரில் சென்று மாற்றிக் கொள்ளலாம்.
* ரூ.20,000 வரையிலான ரூ.2000 நோட்டுக்களையோ அல்லது ஒரே சமயத்தில் 10 ரூ.2000 நோட்டுக்களையோ நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும்.
* தபால் மூலம் ஆர்பிஐ மண்டல அலுவலகங்களுக்கு ரூ.2000 நோட்டுக்களை அனுப்பி வைக்கலாம்.
* ரூ.20,000 க்கு அதிகமான ரூ.2000 நோட்டுக்களை மாற்ற வேண்டும் அல்லது வேறு ஏதாவது வழியில் மாற்ற வேண்டும் என்பவர்கள் அதற்கான உரிய ஆவணங்களை அரசிடம் சமர்பிக்க வேண்டும்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}