சென்னை: தமிழ்நாடு முழுவதும் தீபாவளியையொட்டி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகளில் ரூ. 467 கோடி மது விற்பனை ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருடா வருடம் வரும் தீபாவளியன்று எண்ணைய் தேய்த்துக் குளிக்கிறார்களோ இல்லையோ.. கண்டிப்பாக குடிக்காமல் இருக்க மாட்டார்கள் பலர். அந்த அளவுக்கு தீபாவளிக்கு முதல் நாள் இரவு ஜிலுஜிலுன்னு குடிச்சுட்டுத்தான் அடுத்த நாள் தீபாவளியைக் கொண்டாடுவதை பலர் வழக்கமாக்கி விட்டனர்.
தீபாவளிக்கு எது அதிகமா விற்குமோ இல்லையோ மது விற்பனை மட்டும் படு ஜோராக நடக்கும். இந்த ஆண்டும் அதற்கு ஒரு குறையும் இல்லை எனலாம். கடந்த 2 நாட்களில் மட்டும் 467.69 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. தீபாவளிக்கு முந்தைய சனிக்கிழமை மட்டும் ரூ.221 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

மதுரை மண்டலத்தில் ரூ. 52.73 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ.48.12 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.40.20 கோடிக்கும், சேலம் மண்டலம் ரூ.39.78 கோடிக்கும் திருச்சியில் ரூ. 40.02 கோடிக்கும் என
மது விற்பனையகியுள்ளது. சனிக்கிழமை விற்பனையில் மதுரை மண்டலம்தான் டாப்பாம்.
முதல் நாளே ரூ.221 கோடினா... தீபாவளி அன்று எவ்வளவு தெரியுமா? அதுக்கும் மேல போயிருச்சு... தீபாவளி அன்று மட்டும் தமிழ்நாட்டில் மது விற்பனை ரூ. 246 கோடிக்கு நடந்துள்ளது. திருச்சி மண்டலத்தில் ரூ.55.60 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ.52.98 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ. 51.97 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ. 46.62 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.39.61 கோடிக்கும் என நவம்பர் 12ம் தேதியன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு முதல் நாள் மதுரைன்னா.. தீபாவளி நாளன்று அதிகபட்சமாக திருச்சியில் ரூ. 55.60 கோடிக்கு மது விற்பனையானது. 2 நாட்களிலும் சேர்த்து தமிழ்நாட்டிலேயே அதிக அளவாக திருச்சி மண்டலத்தில் ரூ. 95.62 கோடி அளவுக்கு மது விற்பனையாகியுள்ளது (சே.. 100 கோடி ஜஸ்ட் மிஸ் ஆயிருச்சேன்னு அங்கு புலம்பிக் கொண்டுள்ளார்களாம் விற்பனையாளர்கள்). தமிழகத்திலேயே திருச்சி தான் மது விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.
குடித்த அத்தனை பேரும் பொண்டாட்டி, பிள்ளைகளுக்கு, குடும்பத்துக்கு நல்லபடியாக பண்டிக்கைக்கான எல்லாவற்றையும் செய்திருப்பார்கள் என்று நம்புவோம். மது பிரியர்களே மது வீட்டும் நாட்டிற்கும் கேடு என்பதனை நினைவில் வைத்துக் கொண்டு (அளவோடு) குடித்தால் நல்லது.
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}