சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரண நிதி பெறுவதற்கு, ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தோருக்கும் விரைவில் ரூ.6000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கன மழை பெய்தது. இந்த மழையால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்தது.

குறிப்பாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில், குடும்ப அட்டை இல்லாதவர்களும் வெள்ள நிவாரணப் பணம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு வெளியிட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத்தொகை ரூபாய் 6000 வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக டோக்கன்கள் வீடு வீடாகச் சென்று விநியோகிக்கப்பட்டு வந்தது.
ரேஷன் கார்டு வைத்திருந்தோருக்கு நிவாரணத் தொகை அளித்து முடித்து விட்டநிலையில் தற்போது அடுத்த கட்டமாக ரேஷன் கார்டு இல்லாதோர், வருமான வரி கட்டுவோர் உள்ளிட்டோருக்கு வழங்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்காக விண்ணப்பித்தோர் கணக்கெடுப்பு பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது. விரைவில் இவர்களுக்கும் ரூபாய் 6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தற்போது தெரிவித்துள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}