2 போட்டு 34 ஜீரோ போட்டுக்கங்க... கூகுளுக்கு பயங்கரமான அபராதம் விதித்த ரஷ்ய அரசு.. என்னாச்சு??

Nov 01, 2024,01:16 PM IST

மாஸ்கோ: கூகுள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யூடியூபில் ரஷ்ய அரசு செய்தி நிறுவன சானல்கள், இருட்டடிப்பு செய்யப்பட்டதால் கடுப்பான ரஷ்ய அரசு, கூகுள் நிறுவனத்துக்கு மிகப் பெரிய அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த அபராதத்தைக் கட்டாவிட்டால் ரஷ்யாவில் கூகுள் சேவை தடை செய்யப்படும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.


கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்யா விதித்துள்ள அபராதம் என்ன தெரியுமா.. 20 டெசில்லன் டாலர்கள் ஆகும். எளிதாக புரிய வேண்டுமானால், 2 போட்டு அதற்குப் பின்னர் 34 ஜீரோக்களை சேர்த்துக்கங்க.. அதுதான் அபராதத் தொகை. வரலாறு காணாத இந்த அபராதத் தொகையை கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நடத்தி வரும் யூடியூப் நிறுவனத்திற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ளது.




யூடியூப் நிறுவனம், ரஷ்ய ஆதரவு செய்தி நிறுவனங்கள் பல்வற்றை தடை செய்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை  கூகுள் எடுத்துள்ளது. இதனால்தான் இப்படி ஒரு வரலாறு காணாத அபராதத்தை ரஷ்ய அரசு விதித்துள்ளது.


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே முடிவில்லா போர் நீண்டு வருகிறது. இந்தப் போரை நிறத்தும் வழி தெரியாமல் ஐரோப்பிய நாடுகள் விழி பிதுங்கிப் போயுள்ளன. இந்த நிலைியல் ரஷ்ய அரசு ஆதரவு டிவி சானல்களை யூடியூப் தடை செய்துள்ளது. இந்தத் தடைக்கு எதிராக ரஷ்ய டிவியும் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில்தான் ரஷ்ய அரசு இப்படி ஒரு அபராதத்தை விதிதித்துள்ளது. இந்த அபராதத்தை செலுத்த 9 மாத கால அவகாசமும் அளித்துள்ளது ரஷ்ய அரசு. அபராதம் செலுததத் தவறினால் தினசரி அந்த அபராதத் தொகையானது 2 மடங்காக அதிகரிக்கப்படும் என்றும் ரஷ்ய அரசு எச்சரித்துள்ளது.


கடந்த மார்ச் 2022ம் ஆண்டு முதல் யூடியூபில், ரஷ்ய ஆதரவு மீடியாக்களான ஸ்புட்னிக் மற்றும் ஆர்டி ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.  இது மட்டுமல்லாமல் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படும் 1000க்கும் மேற்பட்ட சானல்களையும் யூடியூப் முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்