மும்பை இந்தியன்ஸை வச்சு செய்த ரூட்டு தல.. அடித்துப் பிரித்த ருத்துராஜ் கெய்க்வாட்.. தெறித்த சேப்பாக்

Mar 23, 2025,10:09 PM IST
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் 2025 தொடரின் 4வது போட்டியில் பவுலிங், பேட்டிங் என இரண்டிலுமே மும்பை அணிக்கு நெருக்கடி கொடுத்து அதிரடி காட்டி மிரட்டி விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஐபிஎல் கிரிக்கெட் 2025 தொடரின் நான்காவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. சென்னை அணியின் பவுலர் நூர் முகம்மது மிடில் ஆர்டரில் இறங்கி, மும்பை அணியின் 4 விக்கெட்களை கைப்பற்றினார். 

வெறும் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை தூக்கிய இவரது பவுலிங் மும்பை அணிக்கு மிகப் பெரிய நெருக்கடியாக அமைந்தது. இதனால் ரன் எடுக்க முடியாமல் மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் திணறி போனார்கள். அதே போல் கலீல் அகமதுவும் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி மும்பை அணிக்கு நெருக்கடி கொடுத்தார். சென்னை அணியின் அனல் பறக்கும் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 155 ரன்களுக்கே அனைத்து விக்கெட்களையும் இழந்து விட்டது மும்பை அணி.



இதையடுத்து சேசிங்கில் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பத்தில் சற்று திணறியது. ராகுல் திரிபாதி 4 ரன்களிலேயே அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் அதன் பிறகு ஜோடி சேர்ந்த ரச்சின் ரவிந்திரா மற்றும் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் இருவரும் இணைந்து மும்பை அணியை தெறிக்க விட்டு வருகிறார்கள். நீ  எப்படி பந்து போட்டாலும் நாங்கள் பவுண்டரியை விளாசுவோம் என்ற ரீதியில் அடித்து நொறுக்கி வருகிறார்கள். 

கேப்டன் ருத்துராஜ் இன்று தாண்டவமாடி விட்டார். அதிரடியாக பொறிந்து தள்ளிய ருத்துரா், அரை சதம் போட்டு சேப்பாக்கம் மைதானத்தை சந்தோஷத்தில் கொந்தளிக்க வைத்து விட்டார்.

இவர்கள் இருவரும் நாலா புறமம் பந்துக்களை அடித்து நொறுக்கியதன் விளைவாக சென்னை அணி 8 ஓவர்களில் 70 ரன்களைத் தாண்டி மிரட்டிக் கொண்டுள்ளது. ஒரு ஓவருக்கு 12 ரன்கள் என்ற வீதத்தில் சென்னை அணி ரன்களை குவித்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமைச்சராகப் பதவியேற்றார் மனோ தங்கராஜ்.. மீண்டும் பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டது!

news

நான் கேட்டதும் ஷாருக்கான் செய்த அந்த செயல்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூறும் வாசிம் அக்ரம்

news

வங்கி வேலைக்கு Goodbye சொல்லி விட்டு.. Audi கார் மூலம் பால் விற்பனை செய்யும் இளைஞர்.!

news

கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!

news

அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி‌.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!

news

தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

news

கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை

news

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்