சென்னை: விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று நடிகர் விஷால் வருகை தரவுள்ளதால் ரசிகர்கள் குவிந்துள்ளனர். அதேபோல இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகரும் இன்று அஞ்சலி செலுத்தவுள்ளார். அதேபோல நடிகர் அதர்வாவும் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.
சிறந்த நடிகராகவும் விளங்கிய தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் டிசம்பர் 28 அன்று மறைந்தார். பல்வேறு திரை பிரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள், என அனைவரும் அவரது இறப்பு நிகழ்வில் பங்கு பெற்ற நிலையில், சென்னை மாநகரமே ஸ்தம்பித்தது. அந்த அளவிற்கு கேப்டன் மறைவிற்கு அலைகடலென கூட்டம் திரண்டது. பின்னர் அவருடைய உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவருடைய நினைவிடத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜயகாந்த் செய்த நன்மைகள் ஏராளம். இதனை நினைவு கூறும் வகையில், பல்வேறு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரைப் பற்றி பேசி, இனிவரும் காலத்தில் அவரது கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும் என விஜயகாந்த் நினைவிடத்தில் சபதம் மேற்கொண்டும் வருகின்றனர்.
நடிகர்கள் கார்த்திக், சிவக்குமார், மற்றும் சூர்யா ஆகியோர் விஜயகாந்த் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினர். இந்த நிலையில், நடிகர் விஜய்யின் தந்தையும், விஜயகாந்த்துக்கு தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்து அவரது முன்னேற்றத்துக்குக் காரணமானவருமான இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இதனைத் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லம் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும் உள்ளார் .
விஷால் வருகிறார்
நடிகர் விஷால் மற்றும் அதர்வா பிரேமலதா விஜயகாந்த்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும் உள்ளனர். நடிகர் விஷால் வருவதையொட்டி ரசிகர்கள் பெருமளவில் நினைவிடத்தில் குவிந்துள்ளனர். விஜயகாந்த் மறைந்த அன்றே ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் விஷால். அதில் அழுதபடி பேசினார். இந்த நிலையில் இன்று அவர் சென்னை வந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}