பந்தனம்திட்டா: புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளதைத் தொடர்ந்து ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.
கேரள மாநிலத்தில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற பக்தி ஸ்தலம் சபரிமலை. கார்த்திகை முதல் தேதி என்றதுமே அனைவருக்கும் நினைவில் வருவது சபரிமலைதான். சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று மாலை நடை திறக்கப்பட்டது.
நவம்பர் 16ஆம் தேதியான நேற்று மாலை நடைதிறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஹரிவராசனம் நடைபெற்று இரவு நடை அடைக்கப்பட்டது. இன்று காலை 5 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
டிசம்பர் மாத இறுதி வாரத்தில் மண்டல பூஜை நடைபெறும். அதைத் தொடர்ந்து படி பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகள் நிறைவடைந்த பின்னர் மீண்டும் நடை சாத்தப்படும். சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு புத்தாண்டுக்கு முதல் நாள் மீண்டும் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அன்று முதல் தொடர்ந்து மகர சங்கராந்தி அதாவது தை மாத பிறப்பு வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
சபரிமலையில், வழக்கமாக ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பு அன்று ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும். வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு படி பூஜைகள் முடிந்த பிறகு ஐந்து நாட்கள் மட்டும் நடை திறந்திருக்கும். அப்போது பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு நடை மீண்டும் அடைக்கப்படும். அதற்கு பிறகு ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் நடை திறக்கப்படும். இது வழக்கமாக சபரிமலையில் நடக்கும் நடைமுறைதான். ஆனால் கார்த்திகை மாதம் மட்டும் கார்த்திகை முதல் நாள் முதல் நடை தொடர்ந்து திறக்கப்பட்டிருக்கும். 48 நாட்கள் இந்த பூஜை தொடர்ந்து நடைபெறும்.
மகர சங்கராந்தி நாளான தை மாத பிறப்பு (அதாவது பொங்கல் தினத்தன்று) மகர ஜோதி தரிசனம் நடைபெறும். அன்றைய தினம் பொன்னம்பலம் மேட்டில் ஐயப்ப சுவாமி ஜோதி ரூபமாக பக்தர்களுக்கு காட்சி தருவதாக ஐதீகம். ஜோதி தரிசனம் முடிந்த பிறகு கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் வரை பூஜைகள் நடைபெறும். அதற்குப் பிறகு மீண்டும் நடை அடைக்கப்படும். அதன் பின்னர் பிப்ரவரி மாதம், முதல் தேதியன்று வழக்கமான பூஜைகளுக்காக நடை திறக்கப்படும்.
முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
{{comments.comment}}