பத்தனம்திட்டா: உலகப் புகழ்பெற்ற கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில், நடப்பாண்டிற்கான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக இன்று (நவம்பர் 16, 2026) மாலை திருநடை திறக்கப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு கோயில் தந்திரி முன்னிலையில், மேல்சாந்தி கோயில் நடையைத் திறந்து வைத்து தீபாராதனை காட்டுவார்.
இதனைத் தொடர்ந்து பதினெட்டாம் படிக்கு கீழ் உள்ள ஆழிக்குண்டத்தில் நெருப்பு மூட்டப்படும். அதன்பிறகு, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களின் மேல்சாந்திகளுக்குப் பொறுப்பேற்கும் நிகழ்வும், அபிஷேகமும் நடைபெறும். இன்று நடை திறக்கப்பட்டாலும், வழக்கமான சிறப்பு பூஜைகள் மற்றும் நெய்யபிஷேகம் ஆகியவை நாளை (நவம்பர் 17) அதிகாலை 3 மணி முதல் தொடங்கும்.இன்று நடை திறக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வரை மொத்தம் 62 நாட்களுக்கு சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 62 நாட்கள் நீளும் பக்திப் பெருவிழாவில், பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.
குறிப்பாக, மண்டல பூஜை காலத்தின் சிகர நிகழ்ச்சியான பிரதான மண்டல பூஜை வரும் டிசம்பர் 27-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெறும். அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மகரவிளக்கு திருவிழா மற்றும் பொன்னம்பலமேட்டில் தெரியும் மகரஜோதி தரிசனம் ஆகியவை வரும் 2027-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி நடைபெற உள்ளது. மண்டல கால பூஜைகளை முன்னிட்டு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

பக்தர்களின் வருகையை முன்னிட்டு திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரள அரசு சார்பில் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆன்லைன் முன்பதிவு (Virtual Queue) முறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பம்பை மற்றும் சன்னிதானம் பகுதிகளில் குடிநீர் வசதி, மருத்துவ முகாம்கள், கழிப்பறை வசதிகள் மற்றும் அன்னதானக் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளதால், அதிகாலை முதலே சரண கோஷத்துடன் பக்தர்கள் பம்பையில் குவியத் தொடங்கியுள்ளனர்.
தினசரி 80,000 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். இவர்களில் 60,000 பேர் ஆன்லைன் புக்கிங் செய்தவர்களும், மீதமுள்ள 20,000 பேர் ஸ்பாட் புக்கிங் மூலமும் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த ஆண்டு கோர்ட் உத்தரவுப்படி பம்பையில் ஸ்பாட் புக்கிங் கிடையாது என்பதால் எருமேலி, நிலக்கல் மற்றும் வண்டிப்பெரியாறு சத்திரம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே ஸ்பாட் புக் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி தலைவராக ஜெய் ஷா மீண்டும் போட்டியின்றி தேர்வு: இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்கிறார்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல - மகரவிளக்கு பூஜைகளுக்காக இன்று மாலை நடை திறப்பு!
எங்கள் வீடு!
அமைச்சர் ஆதவ் அர்ஜூவாவை பிரிவதாக அவரது மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு
9ஆவது இயற்கை மருத்துவ தினம் - 2026.. சிறப்பு நிகழ்ச்சிகளுடன் சென்னையில் கொண்டாட்டம்
நடமாடும் ஏழை!
கோவை சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: நவம்பர் 27-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு!
பெண் பருவங்கள்!
பலகாரக் கூடை.. ஒரு நிமிடக் கதை (59)
{{comments.comment}}