- மடிப்பாக்கம் வி. பிரபாவதி
நடையில் தள்ளாட்டம்
கையில் உணவுப் பொட்டலம்
கண்களில் தீட்சண்யம்
எண்ணத்தில் துளி நிம்மதி
இருப்பதோ
ஒரே ஒரு கைத்தடி தன்னைத்தான்
காத்துக்கொள்ள
இருப்பிடமும் இல்லை
பொறுப்புகளும் இல்லை
வாட்டும் வறுமையில்
வருங்காலம் என்பது எப்படி?

வாழ்ந்து முடிந்த நாட்கள் என்னவோ
வசந்தம் நிறைந்தது
வாழ்ந்து வரும் நாட்கள் முழுதும்
வெறுமை யானது.
ஒருவேளை சோற்றுக்கு
போராட வைப்பது
கிழிந்த இரு புடவையும்
ஒற்றைப் போர்வையும்
குவளையும் தட்டும்
கையிருப்புக்களாய் பையில்
யாதும் ஊரே! யாவரும் கேளிர்!
இருந்தும் இல்லா வாழ்க்கை
பட்டினிப் பழக்கம்
எதிரிகளுக்கும் கூட வேண்டாம்
இக்கதி! நிற்கதி!
(எழுத்தாளர் பிரபாவதி, சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். பேக்கிடெர்ம் டேல்ஸ் (publishers) மூலம் ஏனையோருடன் சேர்ந்து 42 புத்தகங்களில் எழுதியிருக்கிறார். ராணி, விகடகவி, மலர்வனம், லேடீஸ் ஸ்பெஷல், விருட்சம், இறகுகள், தமிழ்நாடு இ பேப்பர், மின் கைத்தடி உள்ளிட்டவற்றில் இருபத்தி ஐந்துக்கும் மேல் சிறுகதைகள் எழுதியுள்ளார். தனது மகளுடன் இணைந்து ஒரே கதையை ஆளுக்கொரு அத்தியாயமாக எழுதி 2 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். சின்னஞ்சிறு கதைகள் என்ற சிறுகதை தொகுப்பும், Boomer to GenZ அலப்பறைகள் என்ற 35 பகுதிகள் அடங்கிய நாவலும் எழுதியுள்ளார்.)
9ஆவது இயற்கை மருத்துவ தினம் - 2026.. சிறப்பு நிகழ்ச்சிகளுடன் சென்னையில் கொண்டாட்டம்
நடமாடும் ஏழை!
கோவை சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: நவம்பர் 27-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு!
பெண் பருவங்கள்!
பலகாரக் கூடை.. ஒரு நிமிடக் கதை (59)
உண்மையான சொத்து இதுதான்!
திருவண்ணாமலையில் கோலாகலமாக களை கட்டும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா
சத்து நிறைந்த மொறுமொறுப்பான நவ தானிய தோசை!
நல்லாசிரியர் த. பொன் ரேகாவின் புதுமையான வழிகாட்டுதலில் மலர்களால் மிளிர்ந்த திருவள்ளுவர்!
{{comments.comment}}