சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாசி மாத பூஜைக்காக வருகின்ற பிப்., 13 தேதி நடை திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வருவர். குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகமானவர்கள் வருவது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வந்தனர். கடந்த மாதம் நடைபெற்ற மண்டல மகர விளக்கு பூஜை முடிந்து கடந்த மாதம் 21ஆம் தேதியுடன் நடை சாத்தப்பட்டது. இதில் சுமார் 52 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் மாசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை வருகின்ற 13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாசி மாத பூஜைக்காக திறக்கப்படும் நடை 14ஆம் தேதி காலை முதல் 18ம் தேதி வரை 5 நாட்கள் திறந்திருக்கும். அந்த நேரத்தில், சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வழக்கமான பூஜைகளுக்கு பிறகு வரும் 18ம் தேதி இரவு ஹரிவராசனம் பாடல் ிைசக்கப்பட்டு கோயில் நடை சாத்தப்படவுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 12-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
மாசி மாத பூஜையை முன்னிட்டு ஐயப்பன் பக்தர்கள் வசதிக்காக கேரள அரசு சார்பில், பத்தனம்திட்டா, கோட்டயம், செங்கன்னூர், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு உட்பட முக்கிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இருந்த கூட்டத்தை போல் இல்லாமல் சற்று குறைவான கூட்டம் வரும் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
{{comments.comment}}