- ஸ்வர்ணலட்.சுமி
ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு இந்த ரிஷப சங்கராந்தி நடைதிறப்பு . விசுவாச ஆண்டு 20 25 மே 14ஆம் தேதி விஷ்ணுபதி புண்ணிய கால நேரத்தில் சபரிமலை நடைதிறப்பு நடைபெற்றது .இந்த நடைதிறப்பு" ஈடிச் சனிக்கிழமை" என்றும் ரிஷப சங்கராந்தி நடை என்றும் அழைக்கின்றனர்.
உலகப் புகழ் பெற்ற புனித தலங்களில் ஒன்றான சபரிமலை சாஸ்தா சபரிமலை ஐயப்பன் கோவில் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும்தான் நடைதிறப்பு ,அதாவது தரிசன வாயில் திறக்கப்படுகிறது. மே- 14 முதல் மே- 19ஆம் தேதி வரை இந்த ஐந்து நாட்கள் நடைதிறப்பு திறந்து இருக்கும். இதனை" ரிஷப சங்கராந்தி" நடைதிறப்பு என்று அழைக்கப்படுகிறது.

சபரிமலை நடைதிறப்பு மற்றும் மூடல் காலம்: சபரிமலை நடைதிறப்பு: மே மாதம் 14ஆம் தேதி 2025 ரிஷப சங்கராந்தி அன்று நடை திறக்கப்பட்டது. சபரிமலை நடை மூடல்: மே மாதம் 19 , 20 25 அன்று இரவு ஐந்து நாட்கள் வழிபாட்டிற்கு பிறகு நடை மூடப்படும்.
"ரிஷப சங்கராந்தி" நடைதிறப்பு என்பது பொதுவாக மே மாதம் அதாவது தமிழ் மாதம் வைகாசி மாதத்தின் தொடக்கத்தில் நடை திறக்கப்படும். இந்த நாளில் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நாள் ரிஷப மாத பூஜை என்பதற்காக நடை திறக்கப்படுகிறது. இந்த நடைதிறப்பு ஐந்து நாட்கள் மட்டுமே திறந்து இருப்பதால் ,ஏராளமான பக்தர்கள் ஐயனை தரிசிக்க சென்று வருகின்றனர். இது ஆண்டு முழுவதும் நடைபெறும் சபரிமலை நடைதிறப்புகளில் முக்கியமானதும் சிறப்பானதுமாக கருதப்படுகிறது.
சிறப்பு பூஜைகள்: இந்த ஐந்து நாட்களில் அபிஷேகம் மற்றும் ஹரிவராசனம் ஐயப்பனுக்கு 12 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. தந்தி பூஜை, உற்சவம் மூர்த்தி அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. மகா தீபாராதனை நடை திறக்கும் நாள் மாலை 6 மணிக்கு நடைபெற்றது. பக்தர்கள் நீராடி கருப்பு மற்றும் நீல நிற உடை அணிந்து மலையற்றி வழியாக சபரிமலை சென்றடைந்து ஐயனை தரிசிக்கின்றனர் .சுவாமி சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தர்மசாஸ்தா ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
இதற்காக பக்தர்கள் சபரிமலை யாத்திரைக்கு முன் ஆன்லைன் வழியாக தரிசனம் பதிவு செய்து கொண்டு செல்கின்றனர். ரிஷப சங்கராந்தி நடைதிறப்பு ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு அரி ய வாய்ப்பு .மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் . வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}