சென்னை: சேலைதான் என்னுடைய கம்ஃபர்ட்டபுள் உடை. நிகழ்ச்சிகளின் போது இது தான் வசதியாக உள்ளது. எனவேதான் சேலையில் வருகிறேன் என்று கூறியுள்ளார் சாய்பல்லவி.
சென்னை பொண்ணு நம்ம சாய் பல்லவி. பிரேமம் என்ற மலையாளப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் சாய்பல்லவி. இந்த படத்தில் மலர் டீச்சர் என்ற காதாபாத்திரத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களை கவர்ந்தவர். அதனைத்தொடர்ந்து தமிழில் கடந்த 2005ம் ஆண்டு மீரா ஜாஸ்மின், பிரசன்னா நடிப்பில் வெளியான கஸ்தூரி மான் என்ற படத்தில் தமிழில் அறிமுகமாகினார்.
டான்ஸ், நடிப்பு ஆகிய இரண்டிலும் பட்டையைக் கிளப்புபவர் சாய் பல்லவி. அவரது சிரிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார். தற்போது பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சாய்பல்லவி. தமிழில் அவர் கடைசியாக நடித்த கார்கி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்போது அவர் சிவகார்த்திகேயனுடன் அமரன், தெலுங்கில் தண்டல், ஹிந்தியில் ஒரு படம் என பிஸியாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
டாக்டர், டான்ஸ்சர், நடிகை என சாய்பல்லவி பன்முகம் கொண்டவர், இயல்பாக நடிக்ககூடியவர். அதிகம் மேக்கப் செய்து கொள்ளாமல் இயல்பான தோற்றத்தில் இருப்பதினால், இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளவர். சாய்பல்லவி பெரும்பாலும் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் அதிக மேக்கப் இல்லாமல், சேலை அணிந்து தான் வருவார். நடிகைகள என்றாலே அதிக மேக்கப்புடன் மாடன் டிஸ்சில் தான் வருவார்கள் என்றால், இவர் மட்டும் அதற்கு நேர் எதிராக விதவிதமான சேலையில் தான் வருவார்.
இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு சாய் பல்லவி பேட்டி கொடுக்கையில் ஏன் எப்பவுமே சேலையில் வர்றீங்க என்று கேட்கப்பட்டது. அதற்கு சாய் பல்லவி, இது என்னுடைய கம்ஃபர்ட்டபுள் உடை. அது தான் எனக்கு வசதியாக இருக்கிறது. ஒரு இடத்தில் பேச வேண்டும் என்றால் என்ன பேச வேண்டும் என்று தான் யோசிக்க வேண்டும். உடையை பற்றியெல்லாம் அந்த நேரத்தில் யோசித்துக் கொண்டிருக்கக்கூடாது. அதனால் தான் எனக்கு வசதியாக இருக்கும் புடவையில் நிகழ்ச்சிகளுக்கு வருகிறேன் என்றார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}