சென்னை: தனது மகன் குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ. 1 கோடி சன்மானம் வழங்குவதாக சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.
முன்னாள் சென்னை மாநகராட்சி மேயரான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர் திரைப்பட இயக்குநராகவும் இருந்தார். என்றாவது ஒரு நாள் என்ற படத்தை விதார்த் - ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிப்பில் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் இமாச்சாலப் பிரதேசத்திற்குச் சென்றிருந்தார் வெற்றி. அவரது நண்பர் கோபிநாத்தும் உடன் சென்றிருந்தார். அப்போது சட்லெஜ் நதி பக்கமாக இவர்கள் காரில் பயணித்தபோது கார் திடீரென தாறுமாறாக ஓடி ஆற்றில் கவிழ்ந்தது.

டிரைவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். கோபிநாத் படுகாயத்துடன் மீட்கப்பட்டார். ஆனால் வெற்றி துரைசாமி என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இதுவரை அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை. சட்லெஜ் நதி நீளமானது என்பதாலும், அங்கு வானிலை மிகவும் மோசமாக இருப்பதாலும், வெற்றியைத் தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனது மகன் குறித்த தகவல் கொடுப்போருக்கு ரூ. 1 கோடி சன்மானம் வழங்கப்படும் என்று சைதை துரைசாமி அறிவித்துள்ளார். விபத்து நடந்த பகுதியில் உள்ளூர் மக்களையும் பயன்படுத்தி தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக தெரிகிறது.
பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!
மாறுமா சமுதாயம்?
வரிகள் கண்ட கண்கள்... இசையை இதழில் சேர்க்கும்..!
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
{{comments.comment}}