ஒரு மகன் போனாலும்.. ஐஏஎஸ், ஐபிஎஸ் மகன்கள், மகள்கள் இருக்கின்றனர்.. சைதை துரைசாமி உருக்கம்!

Feb 14, 2024,10:28 AM IST

சென்னை:  ஒரு மகன் போனாலும் ஐஏஎஸ் ஐபிஎல் பதவிகளில் இருக்கும் மகன்கள், மகள்கள் இருக்கின்றனர். நான் கலங்க மாட்டேன். எனது சேவையை பிரதானப்படுத்துவேன் என மனித நேயம் அமைப்பின் தலைவரும், முன்னாள் சென்னை மாநகர மேயருமான சைதை துரைசாமி உருக்கமாக பேசியுள்ளார்.


சைதை துரைசாமியின் மகனான, இயக்குனர் வெற்றித் துரைசாமி திரில்லர்  படம் எடுப்பதற்காக லொகேஷன் தேடி இமாச்சல பிரதேசம், லடாக் பகுதிகளுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அவரது கார் திடீரென நிலைத் தடுமாறி சட்லஜ் ஆற்றங்கரையில் கவிழ்ந்தது. இவர்களுடன் பயணித்த கார் டிரைவர் டென்சின் சடலமாக மீட்கப்பட்டார்.  உதவியாளர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டு,மருத்துவமனையில் அனுமதித்தனர். 




மாயமான வெற்றி துரைசாமி பிணமாக கண்டெடுக்கப்பட்டார். நேற்று உடல் சென்னை கொண்டு வரப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.  வெற்றி துரைசாமியின் உடல் நேற்று கண்ணம்மாபேட்டையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அப்போது மயானத்தில் கண்கலங்கியபடி சைதை துரைசாமி பேசும்போது, எனக்கு ஆறுதல் சொன்ன அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. நான் கலங்க மாட்டேன். சேவையை பிரதானப்படுத்தி வாழ்க்கையை அமைத்துக் கொள்வேன் என இந்நாளில் சூளுரை கொள்கிறேன். 


ஒரு மகன் போனாலும் ஐஏஎஸ்.., ஐபிஎஸ்.. பதவிகளில் இருக்கும் மகன்கள், மகள்கள், இருக்கின்றனர். இங்குள்ள அனைத்து சமூகத்தினரை சேர்ந்தவர்களையும் அரசு பணியில் சேர்க்க வைக்க முயற்சிப்பேன். இதனை இந்த நேரத்தில் உறுதியாக எடுத்துக் கொள்கிறேன் என உருக்கமாக பேசியுள்ளார்.


சைதை துரைசாமியின் மனித நேய அறக்கட்டளை மூலம் நூற்றுக்கணக்கானோர் அரசுப் பணிகளில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சைதாப்பேட்டையில் இரவு நேர பாடசாலைகளை நடத்தி பலருக்கு கல்வி அறிவையும் கொடுத்து வந்தவர் சைதை துரைசாமி என்பதும் முக்கியமானது.

சமீபத்திய செய்திகள்

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்

news

தோசையம்மா தோசை.. ஹெல்த்தியான தோசை.. சுட்டுச் சுட்டுச் சாப்பிடுங்க.. சூப்பராக வாழுங்க!

news

அரங்கன் யாவுமே அறிந்தவனே!

news

அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது: ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் வாழ்த்து

news

தங்கம் விலையில் அதிரடி... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

அதிகம் பார்க்கும் செய்திகள்