காஞ்சிபுரம்: பல்வேறு கட்ட அம்சங்களை நிறைவேற்றித் தருமாறு தொடர்ந்து போராட்டம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் பத்துக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போராடும் தொழிலாளர்களுக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
இந்த நிலையில் இப்போராட்டம் குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், தொழிலாளர் யூனியன் அமைப்பதற்கு அரசு மறுக்கவில்லை. ஆனால் சாம்சங் நிறுவனம்தான் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்தக் காரணத்திற்காக சாம்சங் நிறுவனம் தனது நிறுவனத்தை தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலத்திற்குக் கொண்டு போவதாக சிலர் வதந்தி பரப்புகின்றனர். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. சாம்சங் இங்குதான் செயல்படும் என்று விளக்கியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பல்வேறு கட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அங்கு 500 மீட்டர் தொலைவில் மிகப்பெரிய திடல் அமைத்து, பந்தல் போட்டு பணியாளர்கள் அமர்ந்து போராட்டம் செய்து வந்தனர். இந்த போராட்டம் 25 நாட்களாக நடைபெற்று வந்தது.
சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அறிவுறுத்தியது.
ஆனால் தொழிலாளர்கள் அதனை ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நான்கு மாவட்டங்களில் இருந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக சிஐடியு அறிவித்திருந்தது.
இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தொழிலாளர்கள் கூட்டமாக வேனில் இருபதுக்கு மேற்பட்டோர் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாத விதமாக வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் நள்ளிரவில் வீடு புகுந்து சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போராட்டம் நடத்தி வந்த பந்தலும் கூட போலீஸாரால் பிரிக்கப்பட்டது. இதனால் மேலும் பரபரப்பு கூடியது.
அரசியல் தலைவர்களான செல்வ பெருந்தகை, முத்தரசன், பாலகிருஷ்ணன் ,வேல்முருகன், உள்ளிட்டோர் இன்று ஆதரவு தெரிவிக்க வருகை தரவிருந்த நிலையில் அடுத்த கட்ட நகர்வாக போலீசார் இச்செயலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, தற்போது கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் தொடர்வதால் பதட்டமும் நீடிக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}