மும்பை: கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹலை, பிரபல மல்யுத்த வீராங்கனை சங்கீதா பொகத் அப்படியே அலேக்காக தலைக்கு மேல் தூக்கி தட்டாமாலை சுற்றியதைப் பார்த்து சஹல் மிரண்டு போய் விட்டார். இந்த வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் இப்போது ஆத்தாடி சங்கீதாவுக்கு எவ்வளவு பவரு என்று விழி விரிய ஆச்சரியத்தை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.
யுஸ்வேந்திர சஹல் கிரிக்கெட் விளையாடுவது மட்டுமல்ல, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பண்ணுவதிலும் பிரபலமானவர், டான்ஸ் ஆடுவார், பாடுவார், ரீல்ஸ் செய்து கலக்குவார், ஆல் ரவுண்டராக வலம் வருபவர் சஹல். இந்த நிலையில் ஜலக் திக்லா என்ற டிவி ரியாலிட்டி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது அவருடன் மல்யுத்த வீராங்கனை சங்கீதா பொகத்தும் கூடவே வந்தார்.

இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டு வந்தபோது சஹல் சொன்ன ஒன்றைக் கேட்டு கலகலப்பான சங்கீதா பொகத், சஹலை அப்படியே முதுகு வழியாக அலேக்காக தூக்கி தட்டாமாலை சுற்றினார். இதை எதிர்பார்க்காத சஹல். அய்யோ தலை சுத்துது கீழே இறக்கி விடு விடு என்று கத்தினார். அதன் பிறகுதான் அவர் சஹலை இறக்கி விட்டார்.
சஹலின் மனைவி தனஸ்ரீ வர்மாவும், இந்த ஜலக் திக்லா நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றவர்களில் ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியான பிசிசிஐயின் வருடாந்திர வீரர்கள் காண்டிராக்ட் பட்டியலில் சஹல் இடம் பெறவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோரும் கூட பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இதுவும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?
Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?
2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!
தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்
இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை
புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்
The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு
ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!
{{comments.comment}}