Sanju Samson: மும்பை அரையிறுதியில் சஞ்சு சாம்சன் ருத்ரதாண்டவம்.. அந்த அரபிக் கடலே அதிர்ந்து போச்சு!

Mar 05, 2026,08:07 PM IST

மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் வானவேடிக்கை காட்டி வெளுத்தெடுத்து விட்டார். 


அரபிக் கடலின் ஆரவாரத்திற்குப் போட்டியாக அவர் காட்டிய அதிரடி  ரன் குவிப்பு 89 ரன்களில் நின்று போனதால் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடந்த போட்டியில் 97 ரன்கள் எடுத்து அசத்திய சாம்சன், அதே வேகத்தை இன்றும் தொடர்ந்தார்  சரமாரியாக அவர் ரன்களைக் குவித்து வந்ததால் போட்டியில் பெரும் விறுவிறுப்பு நிலவியது. 


கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் சரவெடி காட்டிய சஞ்சு சாம்சன் போட்டி முழுவதும் களத்தில் நின்று ஆட்டமிழக்காமல் 97 ரன்களைக் குவித்து வெளுத்துக் கட்டினார். தற்போதும் அதே ஸ்டைலில் அதிரடியாக ஆடினார் சஞ்சு சாம்சன்.




ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன், வெறும் 26 பந்துகளில் தனது அரைசதத்தைக் கடந்தார். ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் சாம் கரன் ஆகியோரின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த சாம்சன், பவர்பிளே ஓவர்களிலேயே இந்தியாவின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அவரை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் இங்கிலாந்து அணி திக்கித் திணறி விட்டனர். தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த சஞ்சு சாம்சன், 41 பந்துகளில் 89 ரன்கள் எடுத்த நிலையில் பில் சால்ட் பந்து வீச்சில் வில் ஜேக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சஞ்சு வீழ்ந்தது ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியது.


இந்திய அணி 15.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்துள்ளது.


முன்னதாக அபிஷேக் சர்மா விரைவில் ஆட்டமிழந்தாலும், இஷான் கிஷனுடன் (39) இணைந்து சாம்சன் அமைத்த பார்ட்னர்ஷிப் இங்கிலாந்து அணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.


இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, மார்ச் 8-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும். சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம் இந்திய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அணி கண்டிப்பாக 225 ரன்களைத் தாண்டும் என்ற நம்பிக்கையில் அனைவரும் உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்