ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!

Sep 21, 2026,01:02 PM IST

- செ.சாந்தி சின்னத்தம்பி, மதுரை


எத்தனை விதத் தனிமை இவ்வுலகில் தான் ....


அழகிய முழு

நிலவொளியில் 

ஆனந்த ராகம் பாடி


அன்றாடப் பிழைப்புக்கு வாய்ப்பு தேடி அல்லாடும் வறியவர் தனிமை...


இயற்கையில் மனம் கரைந்து   

கற்பனை வரிகளோடு கவித்துவம் படைக்கும் 

கவிஞனின் தனிமை ...


மாலை நேர மாருதத்தை மகிழ்ச்சியோடு ரசித்து

இலைகளில் நின்றாடும் குயில்களின் தனிமை ...


காலை நேர மழையோடு கையில் தேநீர்க் கோப்பையோடு 

ரசித்து ருசிக்கும் மங்கையின் தனிமை ...




தொலைதூரப் பயணங்களில் தொலையாத இசையில் மூழ்கியே போகும் மனிதனின் தனிமை ...


வேலையின்றி வாட்டமுற்று வேளை வரும் எனக் காத்திருக்கும் இளையோரின் தனிமை.... 


தன்னவள் தனை மறந்தாலென தடுமாறும் காதலனின் தனிமை....


வயதான காலத்தில் காப்பில்லாக் கவலையில் முதியோரின் தனிமை...


எத்தனை? எத்தனை? தனிமையின் ரகம்தான் எத்தனை?


நானும் நீயின்றிக் காலத்தின் கோலத்தில் எழுதுகிறேன் தனிமைக் கவிதை..


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர் (ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

news

என் தமிழ்.. ஏன் தமிழ்?

news

ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!

news

Short Story: காணாமல் போன கண்ணன்

news

மிளகு பொங்கல் வாசம் மிடுக்காய் பரவி வீசும் பலகாய்கறி சாம்பார் படக்கென பசி தூண்டும்!

news

குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு

news

Folk song by PS Murugesan: பட்டிக் காட்டு மாமன் என்னை கட்டிக் கொள்ள வா புள்ளே!

news

பாஸ்போர்ட் என்றால் என்ன.. அதை எப்படி எடுக்கணும்.. மாணவர்களுக்கு சூப்பர் கிளாஸ்!

news

தேவதை போல் நீ நடந்து.. பட்டுப்புடவை அணிவதன் மகிமை என்னன்னு தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்