- செ.சாந்தி சின்னத்தம்பி, மதுரை
பாதம் நோக்கியே நடந்தன கால்கள் ...
பிடித்த பாடலை முணுமுணுத்தன உதடுகள் ...
நடை சலிப்பு தெரியாது நட்பின் உறவுகள் ....
இரட்டை ஜடை தொங்கிய பூச்சரம்
தமிழ் மனனப் பாடலை மாறி மாறிவழியில் ஒப்புவித்த தருணங்கள்....
கணித ஃபார்முலாக்களை புரிந்தறிந்த பொழுதுகள்...

வழியில் வரும் பஞ்சு மிட்டாயை வாங்கிச் சுவைத்த கணங்கள் ....
பள்ளிவாசலில் விற்ற தேன் மிட்டாய் இலந்தை வடையும் வாங்கி நின்றகாலங்கள்
பள்ளி மணியோசை கேட்டவுடன் தலை தெறிக்க ஓடிய நேரங்கள்....
யாவுமே மனதிலே மணம் வீசிக் கொண்டே இருக்கிறது காலம் கரைந்தோடினாலும்.....
நினைவுகள் என்றும் எக்காலத்தும் சுகமே ...!
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)
தேனினும் இனிய.. பேரருள் நிறைந்த திருவாசகம்!
Happiness is not a destination; it is how we choose to live each day!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
ராவணனின் ராமநாமம்
சம்பந்தியாகும் நீதிபதி
புது ஜோடி
மூன்றெழுத்து காதல் வந்து முழு மனசும் மாறுதே
இத்தாலியில் பள்ளி மாணவிகள் புர்கா அணிய தடை: அமைச்சரவை ஒப்புதல்
{{comments.comment}}