மும்பை: மும்பையில் நேற்று இலங்கைக்கு எதிராக நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஜஸ்ட் 8 ரன்களில் சதத்தை நழுவ விட்டார் சுப்மன் கில். அவரது ஆட்டத்தை பெவிலியனிலிருந்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த சாரா டெண்டுல்கர் அப்செட் ஆகி ரியாக்ட் செய்தார்.
சச்சின் டெண்டுல்கரின் மகள்தான் சாரா டெண்டுல்கர். அவரும், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லும் நல்ல நண்பர்கள்.. காதலிக்கிறார்கள் என்றும் கூட சொல்லப்படுவதுண்டு. இந்த நிலையில் நேற்று ஹோம் கிரவுண்டான மும்பை வாங்கடே மைதானத்தில் இந்தியா - இலங்கை இடையிலான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதை சாரா டெண்டுல்கரும் நேரில் வந்து ரசித்தார். மறுபக்கம் சச்சின் டெண்டுல்கரும் போட்டியைக் கண்டு களித்தார். சாரா வந்திருந்த காரணத்தாலோ என்னவோ, சுப்மன் கில்லின் ஆட்டத்தில் அனல் பறந்தது. சரமாரியாக பட்டாசாக பொறிந்து தள்ளி இலங்கை அணியை துவம்சம் செய்து விட்டார்.
92 பந்துகளைச் சந்தித்த அவர் 92 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். 8 ரன்களில் அவரது முதல் உலகக் கோப்பை சதம் நழுவிப் போனதால் ரசிகர்கள் அப்செட்டாகி விட்டனர். அதை விட அதிகமாக அப்செட் ஆனவர் சாராதான். அபாரமாக ஆடி வந்த சுப்மன் கில், எட்டு ரன்களில் சதத்தை நழுவ விட்டதால் சாரா கடும் அப்செட்டாகி விட்டார். பெருத்த ஏமாற்றமும், வருத்தமும் அவரது முகத்தை கருமையாக்கி விட்டது. அப்படியே இறுகிய முகத்துடன் சில விநாடிகள் இருந்தார் சாரா.
சாரா டெண்டுல்கர் அப்செட் ஆன வீடியோ காட்சி தற்போது டிவிட்டரில் வைரலாகி வருகிறது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}