சென்னை: என் மனைவி ராதிகாவை கேட்டுத்தான் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைக்கும் முடிவை இறுதி செய்தேன் என்று பாஜகவைச் சேர்ந்த நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
1996ம் ஆண்டு திமுகவில் இணைந்து அரசியலுக்கு வந்தார் சரத்குமார். 1998ல் நடந்த லோக்சபா தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.அதன் பின்னர் 2001ம் ஆண்டு சரத்குமார் ராஜ்யசபா தேர்தலில் நின்று எம்.பி ஆனார். 2006ம் ஆண்டு திமுகவை விட்டு வெளியேறினார் சரத்குமார். பிறகு தனிக்கட்சி ஆரம்பித்தார். 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் தென்காசி, நாங்குநேரி ஆகிய இரு சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றது அவரது சமத்துவ மக்கள் கட்சி. தென்காசியில் சரத்குமாரும் நாங்குநேரியில் எர்ணாவூர் நாராயணனும் வென்றனர்.
பின்னர் உட்கட்சி பூசல் காரணமாக அமைதியாகவே இருந்து வந்தார் சரத்குமார். நாராயணன் தற்போது சமத்துவ மக்கள் கழகம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தான் தனது அரசியல் கட்சியை மூடி விட்டு, பாஜகவில் இணைந்து விட்டார் சரத்குமார். இதுகுறித்து இன்று அண்ணாமலை புடை சூழ கட்சியினர், செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் சரத்குமார். அப்போது அவர் உருக்கமாக கூறியதாவது:

பாஜகவில் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சியின் முடிவு அல்ல. மாறாக மக்கள் பணிக்கான தொடக்கம். நாங்கள் மக்கள் பணியில் தொடர்கிறோம். இது நாளைய எழுச்சியாக எடுக்கப்பட்ட முடிவு. நாட்டின் வளர்ச்சிக்காகவும் வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு 2 மணிக்கு இருக்கும், அந்த நேரத்தில் என் மனைவியை எழுப்பி எனக்கு பாஜகவுடன் இணைய தோன்றுகிறது என கூறினேன். அதற்கு அவர் நீங்கள் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் நான் உங்களோடு உறுதுணையாக இருப்பேன் எனக் கூறினார். மனைவியை கேட்ட பின்னர் தான் பாஜகவில் இணைந்துள்ளேன் என்று கூறியுள்ளார் சரத்குமார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}