பெங்களூரு: பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் உடல் இன்று அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நலடக்கம் செய்யப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்தவர் கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி. இவர் தனது 16 வயது முதல் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். முதலில் கன்னடத்தில் அறிமுகமான இவர், அதன்பின்னர் தமிழ் திரையுலகிற்கு வந்தார். 50 ஆண்டு காலதிரை வாழ்வில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவர்.
அன்றைய கால கட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சரோஜா தேவி. பெங்களூரின் மல்லேஸ்வரத்தில் குடும்பத்துடருடன் வசிந்து வந்த அவர் உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக நேற்று காலை காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், என பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது உடல் இன்று வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அதன்பின்னர், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அவரது சொந்த ஊரான ராம்நகர், சென்னப்பட்டணாவில் உள்ள தஷாவரா கிராமத்தில் வைக்கப்பட்டது.அதன்பின்னர் அவரது குடும்ப சம்பிரதாயப்படி சடங்குகள் செய்யப்பட்டது. தஷாவரா கிராமத்தில் அவரது உடல் அரசு மரியாதையுடன், துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. சரோஜா தேவிக்கு கண்ணீருடன் பிரியா விடை கொடுத்தனர் உறவினர்கள் மற்றும் ரசிகர்கள்.
Short Story: ஊன்றுகோல்!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஓடும் நதி ஓசையிலே.. தோடி ராகம் கேட்குதே!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
குழந்தை
புதுவருட டைரி!
{{comments.comment}}