- மஞ்சுளா தேவி
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் நுரையீரலில் SARS-CoV-2 வைரஸ் கிட்டத்தட்ட 18 மாதங்கள் வரை நீடித்து இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகையே உலுக்கிய கொரோனா பரவலை யாரும் மறந்திருக்க முடியாது. அலை அலையாக வந்து உலக நாடுகளை புரட்டிப் போட்டு விட்டது கொரோனாவைரஸ். உலககத்தின் இயல்பான வாழ்க்கையில் ஏகப்பட்ட மாறுதல்களை ஏற்படுத்தி விட்டது கொரோனோவைரஸ் பரவல்.
இந்த நிலையில் கொரோனா குறித்த ஆய்வுகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. அதில் அவ்வப்போது ஏதாவது புதுத் தகவல் வந்தவண்ணம் உள்ளது. அந்த வகையில் புதிதாக ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது கொரோனாவைரஸ் பாதிப்புக்குள்ளான ஒருவருக்கு அந்த வைரஸானது, அவரது நுரையீரலில் குறைந்தது 18 மாதங்கள் வரை இருக்கும் என்பதுதான் அந்தப் புதுத் தகவல்.

கோவிட்-19 தொற்றால் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை எந்த வயதிலும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் இதய நோய், நீரிழிவு நோய், சுவாச நோய் , போன்றவர்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கான உடல் நல பாதிப்பு சற்று தீவிரமடைகிறது. தொடர் சிகிச்சையும், தீவிர கவனமும் தேவைப்படுகிறது.
இந்த நிலையில் பாஸ்டியர் இன்ஸ்டியூட், பிரெஞ்சு ஆய்வுக்கழகம், அணுசக்தி கமிஷன் மற்றும் மாற்று சக்திகளுக்கான கழகம் ஆகியோர் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதில் SARS-CoV-2 கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஒருவருக்கு, அது 18 மாதங்கள் வரை அவரது நுரையீரலில் தங்கியிருக்கும். இவற்றை ஆரம்பத்தில் நாம் கண்டறிந்தாலும் கூட பின்னர் நமது சோதனைகளிலிருந்து தப்பி விடும். இருப்பினும் உடலை விட்டு நீங்காமல் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிலருக்கு இது அப்படியே இருந்து மறைந்து விடுகிறது. சிலருக்கு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளனர் ஆய்வாளர்கள். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், SARS-CoV-2 வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்கில் நீண்ட காலமாக வீக்கம் ஏற்பட்டிருப்பதை நாங்கள் கவனித்தோம். உடலில் வைரஸ் இருப்பதால் இது போன்று வீக்கம் நீடித்து இருக்கலாம் என சந்தேகப்பட்டோம். இதனால் இந்த விலங்குகளின் உயிரியல் மாதிரிகளை ஆய்வு செய்தோம் . அதில்தான் வைரஸ் இருப்பது உறுதியானது.
கிட்டத்தட்ட எச்ஐவி வைரஸ் போலவே இது செயல்படுகிறது. எச்ஐவி வைரஸும் இப்படித்தான். உடலில் தங்கியிருக்கும். எப்போது வேண்டுமானாலும் பாதிப்பை ஏற்படுத்தும். SARS-CoV-2 சிலருக்கு ஆறு மாதம் வரையிலும், சிலருக்கு 18 மாதம் வரையிலும் நுரையீரலில் தங்கியிருப்பது ஆய்வில் தெரிய வந்தது. எந்த வகையான சோதனையிலும் இதை கண்டறிய முடியாத அளவுக்கு அது மறைந்து இருக்கிறது.
அதேசமயம், வீரியம் மிகுந்த SARS-CoV-2 நோய்த் தொற்று ஏற்பட்டிருப்போருக்குத்தான் இது நீண்ட காலம் உடலில் தங்கியிருக்கிறது. இருப்பினும் ஓமைக்ரான் வகை பாதிப்புக்குள்ளானவர்களுக்கு இது குறைவான காலமே உடலில் தங்கியிருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!
"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!
சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்
{{comments.comment}}