சென்னை : சசிகலா வெளியிட்டுள்ள புதிய அறிக்கையால் அதிமுகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக கட்சியை நிர்வகிக்கும் பொறுப்பு யாருக்கு, கட்சி யாருக்கு, கட்சியின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அரசியல் மோதல்கள், சட்ட போராட்டங்கள் ஆகியவை ஒரு வழியாக ஓய்ந்து, கட்சியின் பொதுச் செயலாளராக, கட்சி நிர்வாகிகளால் தேர்வு செய்யப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக.,வில் இருந்த குழப்பங்கள் பெரும்பாலும் சரி செய்யப்பட்டு விட்டதால், தற்போது கட்சியிலும் மக்களிடம் எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு உயர்ந்து, 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேலைகளையும் கட்சியின் முழு வீச்சில் துவக்கி உள்ளனர்.
தமிழகத்தில் ஏறக்குறைய 120 க்கும் அதிகமான தொகுதிகளில் தனது சுற்றுப் பயண பிரச்சாரத்தை நிறைவு செய்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அவரின் பிரச்சாரத்திற்கு பிறகு அதிமுக.,வின் ஆதரவு மக்களிடம் அதிகரித்து வருவதாக உளவுத்துறையின் சர்வேக்கள் சொல்கின்றன. இதனால் தேர்தல் வேலைகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். கூட்டணி கட்சியினர் பற்றியோ, மற்ற கட்சி தலைவர்கள் பற்றியோ விமர்சிக்காமல் தேர்தல் வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அது மட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் தனது தொகுதியில் அதிமுக,வின் வெற்றியை உறுதி செய்வதுடன், கூடுதலாக ஒரு தொகுதியை வென்று காட்ட வேண்டும் என்ற ரகசிய அசைன்மென்ட்டையும் மாவட்ட செயலாளர்களுக்கு கொடுத்திருக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி.
இப்படி அதிமுக புயல் வேகத்தில் தேர்தல் களத்தில் தீவிரம் காட்ட துவங்கி உள்ள நிலையில், கடந்த வார இறுதியில் கட்சி தொண்டர்களுக்கு சசிகலா ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். கடிதத்தில் என்னவோ, "பிரிந்திருக்கும் ஒன்று சேர வேண்டும். அதிமுக.,விற்குள் இருக்கும் பிரிவினை மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வழி செய்து விடும். அப்படி நடந்தால் அது தமிழக மக்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய அநீதி. அதோடு கட்சியின் இரு பெரும் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு செய்யும் மிகப் பெரிய துரோகம். அதிமுக.,விற்கு பின்னடைவு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக தான் 2021 தேர்தலின் போது நாம் அரசியலில் இருந்து விலகி இருந்தேன். ஆனால் அந்த தேர்தலில் அதிமுக.,வால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இந்த நிலை இனியும் தொடரக் கூடாது. அப்படி நீடித்தால் அது நம்முடைய எதிரி திமுக.,விற்கு பலமாகி விடும்" என கட்சி தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதில் என்ன தவறு உள்ளது? இதற்கு எதற்காக அதிமுக கலக்கம் அடைய வேண்டும்? என நினைக்கலாம். கடிதத்தில் அவர் குறிப்பிட்ட விஷயங்கள் என்னவோ அதிமுக.,வில் இருந்து விலகியவர்கள், விலக்கப்பட்டவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது தான். அதோடு இந்த தேர்தலில் அதிமுக.,விற்காக தானே களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்ய போவதாகவும் சூசகமாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்த கடிதத்தில் சசிகலா, தன்னை அதிமுக பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு கடிதத்தை வெளியிட்டுள்ளார். இது தான் அனைவருக்கும் நெருடலை ஏற்படுத்தி உள்ளது.
கட்சி நிர்வாகிகளால் தேர்வு செய்யப்பட்ட பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் போது, சசிகலா எப்படி தன்னை அதிமுக பொதுச் செயலாளர் என குறிப்பிட முடியும்? இதனால் கட்சியை கைப்பற்றி அவர் மீண்டும் முயற்சி செய்ய போகிறாரா? இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆபத்து வந்து விடுமா? கூட்டணி பேசி முடிவு செய்து, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, தேர்தல் வேலைகளை துவக்கி உள்ள இந்த சமயத்தில் சசிகலா வெளியிட்டுள்ள கடிதம் மீண்டும் அதிமுக.,விற்கு புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?
தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
{{comments.comment}}