பரமானந்தம்!

Oct 08, 2026,03:47 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


முற்றும் துறந்தார் முகம் போல,

கற்றுத் தெரிந்தவர் அகம் போல,

தெற்று விலக்கி வைரமென இருத்தல்;

ஆனந்தம்! ஆனந்தம்! பரமானந்தம்!


சோற்றில் விருப்பம் அறவே தள்ளி,

உறுத்தும் மாசை அறவே அறுத்து

சோதி உருவில் தோய்ந்து சேர்ந்திடல்;

ஆனந்தம்! ஆனந்தம்! பரமானந்தம்!


காக்கும் கற்பகம் தாள் பிடித்து,

எவர்க்கும் எளிய ஈசன் அவனின்

இன்னருள் கூட்டி இன்புற்று இருப்பது

ஆனந்தம்! ஆனந்தம்! பரமானந்தம்!




நாத நம்மிடம் நானும் கேட்டேன்!

நாதன் அவன் நடனம் கண்டேன்!

மாதொரு பாகனை மனதில் காண,

ஆனந்தம் ! ஆனந்தம்!

பரமானந்தம்!


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்