- சசிகலா விஸ்வநாதன்
பேருந்திலிருந்து இறங்கிய ராசாத்தி, சுகுணா பாப்பா விழிச்சுருக்குமா; நேற்றே உடம்பு 'கண கண' என்று இருந்தது. இன்றும் காய்ச்சலாக இருந்தால் டாக்டரிடம் கூட்டிப் போக வேண்டும், என்ற முடிவுடன், கவலையுடன் வேகமாக நடந்தாள்.
கிழக்கு வெளுக்கும் முன்தான் கிளம்பினாள். பேருந்து பிடித்து, வழியில் சமையலுக்குத் தேவையான காய்கறி, பழங்கள், பால் வாங்கிய அவள். வேகமாக அந்த அடுக்குமாடி கட்டடத்தின் மேல் தளத்தை அடையும் போது மணி ஏழு.
சுனந்தா, "வா ராசாத்தி! இன்னிக்கு, ஏன் லேட்," என்று கேட்டபடி அவள் கையில் டீ கோப்பையைத் திணித்தாள்.
" அக்கா! அதை விடுங்க; பாப்பாவுக்கு காய்ச்சல் மட்டுப்பட்டதா; இல்லையா?" என்று கரிசனத்துடன் கேட்கவும், திடுக்கிட்ட சுனந்தா, "சுகுணாவுக்கு ஜுரமா? எனக்கு தெரியாதே! நேற்று நான் மீட்டிங் முடித்து வருவதற்கே இரவு மணி பன்னிரெண்டு ஆயிற்று. குழந்தை நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். நானும் உறங்கிவிட்டேன். இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறாள்" என்றதும், ராசாத்தி வேகமாக குழந்தையைத் தூக்க, உடம்பு அனலாய் கொதித்தது." அக்கா! உடனே டாக்டரிடம் கூட்டிப் போகணும்.
"ஐயோ! இதைக்கூட கவனிக்காமல் நான் இருந்தேனே; ராசாத்தி! நான் என்ன மாதிரியான அம்மா! எனக்கு ரொம்ப பயமாயிருக்கிறது" என்றவாறே குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினாள்.

ராசாத்தி, "அக்கா பிள்ளைக்கு காய்ச்சல் என்று தெரியாமல்தான் இருந்திருக்கிறாள். பாவம்தான்! நான் தெரிந்தே காய்ச்சல்காரப் பிள்ளையை பக்கத்து வீட்டு அக்கா வீட்டில் விட்டுவிட்டு வந்திருக்கிறேனே! நான் என்ன மாதிரியான அம்மா! ரெண்டு பேருக்குமே கண்ணைக் கொடுத்து ஓவியம் வரைகிற பிழைப்பு! அக்கா வந்ததும் அவங்க ஃபோனில் பக்கத்து வீட்டு அக்காவிடம் பேசி பிள்ளை எப்படி இருக்கான்னு கேட்டு தெரிஞ்சுக்கணும்.
காய்ச்சல் குறையலைன்னா தெரு முக்கு கம்பௌண்டரிடமாவது காட்டி ஏதேனும் இங்கிலிஷ் மருந்து வாங்கணும், என்று கவலையுடன் நினைத்துக் கொண்டாள்.
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும், தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
சோனியா புத்தக விழா: ராகுல் காந்தி தொலைபேசி அழைப்பை ஏற்க மு.க.ஸ்டாலின் மறுத்தாரா? – திமுக விளக்கம்
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை: தகவல் வெளியிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு
திசை மாறிய அக்வான் புயல் :தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட மஞ்சள் அலர்ட் வாபஸ்
பண மோசடி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
வறுமையின் கண்ணீரில் மலர்ந்த நம்பிக்கை.. வேரில் இருந்து விழுது வரை- (6)
'அக்வான்' புயல்: மசூலிப்பட்டினம்-பூரி இடையே கரையைக் கடக்கும் வானிலை மையம் தகவல்
தங்கை – பிறக்காத உறவிலும் பூத்த பாசம்.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (16)
ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி: மங்கோலியா அதிபர் உக்னாகின் குரேல்சுக் திடீர் பதவி விலகல்!
{{comments.comment}}