Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

Apr 08, 2025,05:54 PM IST

சென்னை:  தமிழ்நாடு தொடர்பான முக்கிய வழக்கில், உச்சநீதிமன்றம் 2வது முறையாக தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கிறது. 142வது சட்டப் பிரிவு இந்த சிறப்பு அதிகாரத்தை உச்சநீதிமன்றத்திற்குத் தருகிறது.


உச்சநீதிமன்றம் இன்று, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் பிறப்பித்துள்ள உத்தரவு பல்வேறு வழிகளிலும் வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக மாறி உள்ளது. கடந்த காலத்தில் பேரறிவாளன் வழக்கில் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அவரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்திருந்தது.


அதன் பிறகு தற்போது மீண்டும் அந்த சிறப்பு அதிகாரத்தை சுப்ரீம் கோர்ட் பயன்படுத்தி இருப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு வழக்குகளும் தமிழ்நாடு தொடர்பானவை என்பது கூடுதல் அம்சமாகும்.




தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்திருந்த 10 சட்ட மசோதாக்களுக்கும் தாங்களே ஒப்புதல் அளிப்பதாகவும் இதைத்தவிர வேறு வழி இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட் இன்று தெரிவித்துள்ளது.


உச்சநீதிமன்றம் இன்று ஒப்புதல் அளித்த 10 சட்ட மசோதாக்கள் விவரம்:


1. தமிழ்நாடு மீன்வளப் பல்கலை திருத்த சட்ட மசோதா

2. கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை திருத்த சட்ட மசோதா (இந்த இரண்டு மசோதாக்களும் கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டவை)


3. தமிழ்நாடு பல்கலைகள் சட்டங்கள் திருத்த சட்ட மசோதா

4. டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை திருத்த சட்ட மசோதா

5. டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை திருத்த சட்ட மசோதா

6. வேளாண் பல்கலை திருத்த சட்ட மசோதா

7. தமிழ்நாடு பல்கலைகள் சட்டங்கள் இரண்டாம் திருத்த சட்ட மசோதா8.  தமிழ் பல்கலை இரண்டாம் திருத்த சட்ட மசோதா

9. 2023ம் ஆண்டு மீன்வளப் பல்கலை திருத்த சட்ட மசோதா

10. கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை திருத்த சட்ட மசோதா (கடைசி 8 மசோதாக்களும் திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டவை)


நாட்டுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு




உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று பெற்றுள்ள தீர்ப்பானது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் செல்லுபடியாகும் என்பதால் இந்த தீர்ப்பு பல்வேறு மாநில அரசுகளுக்கு, குறிப்பாக பாஜக அல்லாத கட்சிகள் அரசாளும் மாநில அரசுகளுக்கு மிகப் பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 


குறிப்பாக கேரளா, மேற்கு வங்காளம், தெலுங்கானா உள்ளிட்ட பாஜக அல்லாத முக்கிய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு ஆளுநர்களால் ஏற்படக்கூடிய சிக்கல்களானது கிட்டத்தட்ட நீங்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும். கேரளாவும், மேற்கு வங்காளமும் தமிழ்நாட்டைப் போலவே ஆளுநர்களுடன் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பை. இவற்றுக்கு மிகப் பெரிய விமோச்சனம் தற்போது கிடைத்துள்ளது.


தற்போதைய தீர்ப்பின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது ஆளுநர்களுக்கு காலக்கெடு விதித்திருப்பது. இதன் மூலம் அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு மேல் எந்த ஒரு சட்ட மசோதாவையும் ஆளுநர் கிடப்பில் வைத்திருக்க முடியாது. இதன் காரணமாக மாநில அரசுகள் கொண்டு வரும் சட்ட மசோதாக்கள் இனி காலவரையின்றி கிடப்பில் போடப்படும் நிலை மாற்றப்பட்டுள்ளது.


அனைத்து வகையிலும் பார்க்கும்போது இந்த தீர்ப்பானது, மிகப்பெரிய ஒரு புரட்சிகரமான தீர்ப்பாகவே கருதப்பட வேண்டி உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அனைத்து மாநில அரசுகளுக்கும் மிகப்பெரிய தீர்ப்பை தமிழ்நாடு அரசு வாங்கி கொடுத்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.  இதன் மூலமாக, தமிழ்நாடு, இந்தியாவுக்கே வழிகாட்டி உள்ளதாகவே கருத வேண்டும். மேலும் இந்த தீர்ப்பின் மூலமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின்  செல்வாக்கு அகில இந்திய அளவில் உயர்ந்துள்ளது என்பதும் முக்கியமானது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

news

இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்