ஸ்பெஷல் கிளாஸ் நடத்தவே கூடாது.. மீறினால் கடும் நடவடிக்கை.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

May 04, 2024,05:14 PM IST

சென்னை:  தமிழ்நாட்டில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கோடை விடுமுறையின் போது சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


கடந்த சில நாட்களாகவே கடுமையான வெயிலின் தாக்கத்தால் வெப்ப அலை அதிகமாக வீசுகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இது தவிர கத்திரி வெயில் இன்று ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே நிலவும் வெப்ப அளவைவிட கத்திரி வெயில் காலத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


இதன்படி பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும், அவ்வப்போது போதுமான அளவு நீர் அருந்த வேண்டும் எனவும் , நீர்ச்சத்துக் மிகுந்த காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட வாரியாக மாவட்ட ஆட்சியாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.




ஒவ்வொரு வருடமும் ஆண்டு இறுதியில் நிலவும் கத்திரி வெயிலையும்  கருத்தில் கொண்டு தான்  பள்ளி மாணவர்களுக்கு  தமிழக அரசு கோடை விடுமுறை அளித்து வருகிறது. ஏனெனில் இந்த காலகட்டத்தில் வெயில் கடுமையாக நிலவி வருவது வழக்கம். அப்போது குழந்தைகள் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் பள்ளிக்கு செல்லும்போது  எளிதாக பாதிப்படைவர். இதனை தவிர்க்கவே ஆண்டு இறுதித் தேர்வு முடிந்த பின்னர் பள்ளி குழந்தைகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. 


இதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் படிக்கும் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டும்.  இதனை அறிந்த பள்ளிக்கல்வித்துறை பள்ளி குழந்தைகளுக்கு கோடை விடுமுறையின் போது சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என கடந்த சில வருடங்களாகவே அறிவுறுத்தி வந்தது. ஆனாலும் பள்ளிகள் இதனை முழுமையாக செயல்படுத்தவில்லை.


இந்த நிலையில் ஏற்கனவே கோடை விடுமுறை விட்ட நிலையில், இந்த வருடம் நிலவும் கடுமையான வெயில் காலத்திலும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக  தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இதனை அறிந்த பள்ளிக்கல்வித்துறை அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் சிறப்பு கவனம் செலுத்துமாறு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில் சிறப்பு வகுப்புகளை கட்டாயம் நடத்தக்கூடாது. சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். 


மேலும் மீறி சிறப்புகள் நடத்தும்  பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்