சிவகங்கை: சிவகங்கையில் உள்ள பள்ளியில் 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆரிசியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது கோர்ட்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பெரிய நரிக்கோட்டை கிராமம் உள்ளது. இந்தப்பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு 62 வயது. இவர் கடந்த 2015ம் ஆம் ஆண்டு பணிபுரிந்து வந்த போது அப்பள்ளியை சேர்ந்த 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவிகள் 6 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

சிறுமிகள் பயந்து போய் இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த 6 சிறுமிகளில் ஒருவர் தனது பாட்டியிடம் விசயத்தை கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பாட்டி சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் விசாரித்த போலீசார் தலைமையாசிராக இருந்த முருகனை கைது செய்தனர். அவர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில், முருகன் குற்றவாளி என்பது நிரூபணமானது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சரத்ராஜ் இன்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பில் 6 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டணை, ஒவ்வொரு மாணவிக்கும் பாலியல் தொல்லை கொடுத்தற்காக 47 ஆண்டுகள் சிறை தண்டைனயும், ரூ.69 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்வு வழங்கினார். தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 6 மாணவிகளுக்கும் தமிழக அரசு இழப்பீடாக ரூ.29 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
இப்பூலோகமே கொண்டாடும் பெண்மை வாழ்க!
கள்ளமில்லா புன்னகையால் .. கவர்ந்து இழுக்கும் காந்த புயல்கள்
நீர்,நிலம், காற்று.. ஆகாயம் அவள் விழி அசைவில்...!
வலிகள் நிறைந்த வார்த்தைகளோடு.. தேசிய பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
{{comments.comment}}