சென்னை: தொடர் கன மழை எதிரொலியாக சென்னை, கடலூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வட கிழக்குப் பருவ மழை சூடு பிடித்துள்ளது. நாளை 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றுள்ளது.

மறுபக்கம் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் பணிகள் தொடங்கியுள்ளன. சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு , கடலூர் மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதேபோல புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும், அதற்குட்பட்ட காரைக்கால் மாவட்டத்திற்கும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல மாவட்டங்களில் விடுமுறை
தற்போது மேலும் பல மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல தஞ்சாவூரிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}