சென்னை: இந்த ஆண்டு மே 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் மே 28ம் தேதியாகிய இன்றுடன் நிறைவு பெறுகிறது.
ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் தான் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயில் தொடங்கும். பூமியில் அதிக வெயிலின் தாக்கம் இந்த மாதத்தில் தான் அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் இருக்கும் வெயிலை கட்டிலும் அதிக உஷ்ணத்துடன் இருக்கும், இந்த காலகட்டத்தில் மனிதர்களுக்கு வெயிலினால் ஏற்படக் கூடிய உடல் பாதிப்புகள் சற்று அதிகமாகவே இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் சித்தரை மாதம் தொடங்கி வைகாசியில் நிறைவடையும். அதேபோல் தான் இந்த ஆண்டும் மே 4ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி (இன்றுடன்) முடிகிறது. இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்னரே வெயில் 100 டிகிரியை தாண்டி அடித்தது. குறிப்பாக கோடை காலம் தொடங்கும் முன்னரே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தமிழகத்தில் பல மாவட்டங்கள் கோடை வெயிலினால் மிகவும் பாதிக்கப்பட்டனர் பொதுமக்கள்.
தமிழகத்தில் இந்த வெயிலின் தாக்கத்தினால் மக்கள் யாரும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்னர் வெயில் தாக்கம் குறையும் விதத்தில் கோடை மழை பெய்து பூமியையும், மக்களையும் குளிர்வித்தது. தமிழகத்தில் பரவலாக அக்னி நட்சத்திர காலத்தில் மழை பெய்தது.இந்த மழை முதலில் லேசாக பெய்ய தொடங்கி பின்னர் கனமழையாக உருவெடுத்தது.
இந்த கன மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சிறுவன் ஒருவன் பலியாகினான்.அணைகள் நிறம்பின. இந்த நிலையில், நேற்றுடன் மழை ஒரளவிற்கு முடிந்து வெயில் அடிக்க ஆரம்பித்துள்ளது. இன்றுடன் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் முடிவடைகிறது. கத்திரி வெயில் முடிவு தமிழக மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}