தனுஷ்கோடியில் திடீர் கடல் சீற்றம்... போகக் கூடாது.. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு!

Apr 01, 2024,01:01 PM IST

சென்னை:  தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தனுஷ்கோடியில் ஏற்கனவே புயலால் அழிந்த கட்டிடங்கள் இருந்த பகுதிகளில் நேற்று கடல் நீர் புகுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து  ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதே போல நேற்றும் சுற்றுலா பயணிகள் விடுமுறை நாள் என்பதால் அதிகளவில் வருகை தந்திருந்தனர்.




ராமேஸ்வரம் தனுஷ்கோடி தெற்கு பகுதி மன்னர் வளைகுடா கடலில் நேற்று மதியம் 2 மணி முதல் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த சுற்றுலா பயணிகளுக்கிடையே பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் சுற்றுலா பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக அப்பகுதியில் இருந்து வெறியேற்றப்பட்டனர். வழக்கத்தை விட அப்பகுதியில்  நீர்மட்டம் அதிகரித்தது. திடீர் என்று  மாலை 5 மணிக்கு பிறகு எம் ஆர் சத்திரம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து அரிச்சல் முனை வரையிலும் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு கடற்கரை பகுதி முழுமையாக கடல் நீரால் சூழ்ந்தது. 


தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலைகளிலும் கடல் நீர் தேங்கியது. அப்பகுதியில் உள்ள மீனவர்களின் குடிசைகள், ஹோட்டல், கடைகள் என அனைத்து பகுதிகளிலும் கடல் நீர் சூழ்ந்தது.  தனுஷ்கோடி அரிச்சல் முனை கடலில் இருந்து  ராட்சச அலைகளால் தேசிய நெடுஞ்சாலையில் கடல் நீர் கடந்து சென்றது. இதனால் அப்பகுதியில் உள்ள 2 கிலோ மீட்டர் அளவிற்கு தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே கற்கள், கடலில் உள்ள பாசிகள், தாழை செடிகள் குவிந்து காணப்பட்டன.


இந்நிலையில், தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. 5 அடி வரை கடல் அலை எழுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி  அப்பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள்  மட்டும் தனுஷ்கோடி செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்