சென்னை: அதிமுக- தேமுதிக இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெற்றுள்ளது. இதில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முன் வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது வெற்றிக்கூட்டணியாக அமையும் என்று தேமுதிக தலைவர்கள் கூறியுள்ளனர்.
லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில வாரங்களில் உள்ளன. தேர்தல் நடைபெறுவதற்கான தேதி குறித்த அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளிவரும் என எதிர்பார்த்து வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு கூட்டணி கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்து வருகின்றனர்.
அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தீவிரமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறது. புதிய தமிழகம், அகில இந்திய பார்வர்ட் பிளாக் ஆகியவை கூட்டணியில் இணைந்துள்லன. இந்த நிலையில், தேமுதிகவுடன் கூட்டணியை உறுதிப்படுத்த இன்று 2வது சுற்றுப் பேச்சுவார்தை நடைபெற்றது.

தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் 14 லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதியை கொடுக்கும் கட்சிகளுடனே கூட்டணி அமைப்பதாக முதலில் கூறி வந்தார். ஆனால் அதை அதிமுகவும் ஏற்கவில்லை, பாஜகவும் ஏற்கவில்லை என்று தெரிகிறது. ரகசியமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாகவும் தகவல் பரவி வந்தது.
இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி அதிமுக தேமுதிகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதிமுகவுடன் நடந்த முதல் கட்ட பேச்சு வார்த்தையில் மாநிலங்களவை பதவி தொடர்பாக தேர்தலுக்குப் பின் முடிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டதாகவும் அப்போது கிருஷ்ணகிரி, விருதுநகர், திருச்சி, கடலூர் ஆகிய தொகுதிகளை ஒதுக்க தேமுதிக வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கடந்த முறை ஒதுக்கிய வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக- தேமுதிக இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், தேமுதிக துணை செயலாளர் எல்.கே சுதீஷ், அவைத்தலைவர் பி இ இளங்கோவன், அழகாபுரம் ஆர் மோகன்ராஜ், பா. பார்த்தசாரதி உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு கலந்து கொண்டது. இதில் தொகுதிகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
வெற்றிக் கூட்டணியாக அமையும்

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தேமுதிக தலைவர்கள் கூறுகையில், பேச்சுவார்த்தை தொடரும். இன்றைய பேச்சுவார்த்தை நல்லபடியாக இருந்தது. இது வெற்றிக் கூட்டணியாக அமையும். தொடர்ந்து பேசுவோம். பரஸ்பரம் பேசிக் கொண்டோம், கூட்டணியாக இருப்போம் என்று முடிவெடுத்துக் கொண்டோம். அடுத்தடுத்து பேசும்போது எத்தனை தொகுதிகள் என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றனர்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}