ஓடி வந்த உதவியாளர்.. "கப்"புன்னு நிறுத்தி கதவை மூடிய கார்டுகள்.. "ஸ்டன்" ஆன சீன அதிபர்!

Aug 24, 2023,01:19 PM IST
ஜோஹன்னஸ்பர்க்: சீன அதிபரின் உதவியாளரை தடுத்து நிறுத்தி வேகமாக கதவை மூடிய பாதுகாவலர்களின் செயலால் சீன அதிபர் ஜீ ஜின்பிங் அதிர்ச்சி அடைந்தார். திரும்பித் திரும்பிப் பார்த்தபடி அவர் கூட்ட அரங்குக்குள் சென்றார்.

தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் 15வது பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் இதில் கலந்து கொண்டுள்ளார்.



இந்த மாநாட்டின்போது நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜீ ஜின்பிங் தனது உதவியாளருடன் நடந்து வருகிறார். கூட்டம் நடைபெறும் அரங்குக்குள் அவர் நுழைகிறார். சற்று பின் தங்கி வந்த அவரது உதவியாளர், ஜின் பிங்கை  பின் தொடர வேண்டும் என்பதற்காக வேகமாக ஓடி வருகிறார்.

ஆனால் அவரைப்  பிடித்து தடுத்து நிறுத்திய பாதுகாவலர்கள் அவரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துகின்றனர். மேலும் கதவையும் வேகமாக இழுத்து ��ூடி விடுகின்றனர். தனக்குப் பின்னால் வந்த உதவியாளரைக் காணாமலும், ஏதோ சத்தம் கேட்கிறதே என்றும் திரும்பிப் பார்க்கிறார் ஜின்பிங். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. திரும்பித் திரும்பிப் பார்த்தபடி அவர் தொடர்ந்து நடந்து செல்கிறார்.



சீன அதிபரின் உதவியாளர் திடீரென ஓடி வந்ததால் பதட்டமடைந்தே, பாதுகாப்புக்கு பிரச்சினை வந்து விடக் கூடாது என்ற அச்சத்தில் அவரை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்