சென்னை: விஜய் கட்சி சார்பில் நடத்தப்படும் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் நான் செல்வேன். என் தம்பி சொன்னதையே நான் சொல்றேன். ஐ ஆம் வெயிட்டிங் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை போரூரில் ஈழ இனப்படுகொலை நாளையொட்டி இன எழுச்சி நாள் நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வு நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வாக்கு பெட்டிகள் வைத்திருக்கும் இடங்களில் எங்காவது சிசிடிவி பழுதானால் சரி. ஆனால் பல இடங்களில் ஆகிறது என்றால் அதைப் பற்றி யோசிக்க வேண்டும். கேப்டன் விஜயகாந்த் இருக்கும்போது அவருக்கு பத்மபூஷண் விருது கொடுத்திருக்க வேண்டும். அதற்கு தகுதியான நபர் அவர். கட்சித் தலைவர், நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர்.
சவுக்கு சங்கர் பேசியது தவறு. அதனை மறுக்க முடியாது. பாஜக பத்தாண்டு கால ஆட்சியில் செய்த சாதனைகளை கூறி வாக்கு கேட்க முடியவில்லை. தேர்தல் வரை தமிழ்நாட்டில் சீராக மின்சாரம் கொடுப்பார்கள். ஆனால், தேர்தல் முடிந்தவுடன் துண்டித்து விடுவார்கள். அனைவருக்கும் தெரிந்தது தான் இது.
யார் ஆட்சிக்கு வந்தால் எனக்கு என்ன நடக்கப் போகிறது. அது குறித்து பேசுவது தேவையற்றது. திமுக அரசு சாதித்து இருந்தால் மக்கள் தான் பேச வேண்டும். நீங்கள் சொல்ல வேண்டாம். இது செயல் அரசியலோ அல்லது சேவை அரசியலோ இல்லை. செய்தி அரசியல் தான்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் இருந்து அழைப்பு வந்தால் நான் போவேன். நாட்டின் பிரச்சனையை தீர்க்க அண்ணனும் தம்பியும் சேரக்கூடாது என்பது தானே. விஜயும் நானும் சந்திப்பதில் என்ன பிரச்சனை? என்றார். 2026 விஜய்யுடன் இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு சீமான் கூறுகையில், விஜய் பாணியில் சொல்கிறேன் ஐ ஆம் வெயிட்டிங் என்றார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}