சென்னை: தங்கச்சி காளியம்மாளை அறிமுகப்படுத்தியதே நான்தான். வேறு ஏதாவது அமைப்பில் அவர் சேர விரும்பினால் அது அவரது முழு உரிமை. போய்ட்டு வாங்க என்று சொல்லி அனுப்பி வைப்போம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக இருப்பவர் காளியம்மாள். சீமானுக்கு அடுத்த இடத்தில் உள்ள முக்கியப் புள்ளிகளில் அவரும் ஒருவர். அவரது பேச்சுக்கும், விவாதத் திறனுக்கும் கட்சிக்குள் மட்டுமல்லாமல், கட்சியையும் தாண்டி நிறைய ரசிகர்கள் உண்டு. அந்த அளவுக்கு சிறப்பாக பேசக் கூடியவர்.
அப்படிப்பட்ட காளியம்மாள் குறித்து சீமான், பிசிறு என்று விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தபோது பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு காளியம்மாள் அமைதியாகி விட்டார். கட்சி சார்ந்த எந்த செயல்பாட்டிலும் அவர் இல்லை. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்குக் கூட அவர் போகவில்லை.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு பகுதியில் நடைபெறவுள்ள ஒரு நிகழ்ச்சியில் அவரது பெயருக்குக் கீழே சமூக செயற்பாட்டாளர் என்ற வாசகம் இடம் பெற்றிருப்பதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியை விட்டு விலகப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்டபோது, அது எனக்குத் தெரியாது. கட்சிக்குள் அனைவருக்குமே முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளது. விருப்பம் இருந்தால் இருக்கலாம். இல்லாவிட்டால் விலகிக்க உரிமை உண்டு. காளியம்மாள் மட்டுமல்ல, இதோ என் பக்கத்தில் இருக்காரே அவர் கூட நாளைக்கு ஏதாவது இயக்கத்தில் சேர விரும்பினால் சேரலாம். எல்லா சுதந்திரமும் உள்ளது.
என் தங்கச்சியை நான் தான் கூட்டி வந்தேன். நான்தான் அறிமுகப்படுத்தினேன். அவர் வேறு கட்சியிலோ, அமைப்பிலோ சேர விரும்பினால் தாராளமாக அவர் முடிவெடுக்கலாம். எங்க கட்சிக்கு யாராவது வந்தால் வாங்க என்று அழைத்து நன்றி சொல்வோம். போகும்போது போங்க, ரொம்ப ரொம்ப நன்றி என்று சொல்வோம்.
எப்படி இலை உதிர் காலம் என்று ஒன்று இருக்கிறதோ அதுபோல எங்க கட்சிக்கு இப்போது களை உதிர் காலம். எனவே தங்கச்சிக்கு முழு உரிமை உள்ளது. தாராளமாக போகலாம் என்று கூறினார் சீமான்.
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!
தேனிசை வானில் கலந்தது!
ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!
களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!
தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!
கிளிகள் கூவும் தேனிசை தந்தவர் - தேவா!
{{comments.comment}}