சென்னை: திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் தான் ஆசிரியர்கள் போராடுகின்றன. இது எப்படி குற்றமாகும். இந்த குற்றத்தை செய்ய தூண்டியது யார்?. இந்த வாக்குறுதியை கொடுத்தவர்தான் குற்ற செயலுக்கு காரணம். அவர் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள் அவர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்திக்க வந்தார். அப்போது போலீசார் ஆசிர்யர்களை சந்திக்க மறுத்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை சந்திக்க தன்னை அனுமதிக்க கோரி சீமான் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசுகையில், திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் தான் ஆசிரியர்கள் போராடுகின்றன. இது எப்படி குற்றமாகும். இந்த குற்றத்தை செய்ய தூண்டியது யார்?. இந்த வாக்குறுதியை கொடுத்தவர்தான் குற்ற செயலுக்கு காரணம். அவர் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு வீடு தேடி அரசு என்று சொல்லி விளம்பரம் செய்கிறது. எத்தனை ஆயிரம் ரூபாய் கோடிகளை கொட்டி இந்த திராவிட கட்சிகள் ஆட்சி செய்கிறது. அரசியல் தான் செய்யும். சேவை அரசியலோ, செயல் அரசியலோ அவர்களுக்கு தெரியாது. அவர்கள் செய்யவும் மாட்டார்கள்.
இப்பொழுது வீடு தேடி அரசு என்று சொல்கிறார்கள். என் மக்கள் ரோடு தேடி போராடுவதற்கு வருகிறார்கள். அவ்வளவு பிரச்சனை. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் திமுக அரசு ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறது என்கிறார். இதில் பெருமை ஏதும் இருக்கிறதா? இந்த அரசும், முந்தைய அரசும் மக்களுக்கு ஒரு லட்சம் பிரச்சனைகளை கொடுத்து இருக்கிறது. ஒரு லட்சம் போராட்டங்களை அவர்கள் மீது திணித்து இருக்கிறது. போராடிக் கொண்டு இருப்பவர்கள் வீதியில் நிற்பவர்கள் யார் என்று யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்வு.... சவரனுக்கு ரூ.240 உயர்வு!
Crab.. வீட்டுக்கு நண்டு வந்தா நல்லதா கெட்டதா?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!
சொர்க்கமே என்றாலும் அது எங்கூரைப் போல வருமா.. வாக்கப்பட்ட மண்!
சட்டசபை அலங்கார முகப்புடன் அ.தி.மு.க பொதுக்குழு.. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன!
Quick Tips: சப்பாத்தியை பல்லு இல்லாத தாத்தாவும் சாப்பிடுவாரு இப்படி தந்தா!
திருமுக்கீச்சரம் என்ற உறையூர்.. தேவாரத் திருத்தலங்கள் (2)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 10, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்
{{comments.comment}}