சென்னை: அதே பழைய கேள்விகளைத்தான் கேட்டார்கள். நானும் அதை பதில்களைத் தெரிவித்தேன். திமுக அரசின் அழுத்தமே இதற்குக் காரணம். திமுக தூண்டுதலில்தான் நடிகை தொடர்ந்து வீடியோ போடுகிறார் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.
வளசரவாககம் காவல் நிலையத்தில் நடந்த விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் சீமான். அப்போது அவர் கூறுகையில், அதே பழைய கேள்விகள்தான். முன்பு 3 மணி நேரம் நடந்தது. அப்போது வேறு இன்ஸ்பெக்டர். இப்போது புது இன்ஸ்பெக்டர். அதையேதான் இப்போதும் சொன்னேன். புதிய கேள்விகள் எதுவும் இல்லை. விளக்கம் கொடுத்துட்டேன்.
எப்போ சந்திச்சீங்க, என்ன நடந்தது. அதே கதைதான். தேவைப்பட்டால் மறுபடியும் விசாரணக்கு அழைப்போம்னு சொன்னாங்க. ஒத்துழைப்பதாக சொன்னேன். ஏற்கனவே விசாரிச்சாச்சு. நான்தான் வழக்கைத் தொடர்ந்தேன். மூனே நாளில் விசாரித்து முடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுக்குள்ள அவசரம் அவசரமாக விசாரிக்க அவசியமில்லை.

அசிங்கப்படுத்தும் நோக்கம்தான் இதெல்லாம். என் வீட்ல போய் அழைப்பாணையை ஒட்டியது தேவையில்லாதது. நல்ல முறையில் நடத்தினாரகள். ஆனால் எனது தம்பி சுபாகரை இரும்புக் கம்பியை துணியில் கட்டி அடித்துள்ளனர். அது தேவையற்றது, அவசியமற்றது.
அரசுத் தரப்பின் அழுத்தம் இல்லாமல் இது நடக்க வாய்ப்பில்லை. இது இடையூறு அல்ல. முதல்வரின் தந்தை கருணாநிதி என்னை கைது செயது சிறையில் அடைத்து தலைவராக்கினார். அவரது மகன் என்னை முதல்வராக்காமல் ஓய மாட்டார். நிச்சயம் இது நடக்கும்.
எந்தப் பின்புலமும் இல்லாமல் மக்கள் என்னை அங்கீகரித்துள்ளனர். இதெல்லாம் பாதிக்கவில்லை. மக்களிடம் எனது பெயரை சிதைக்க அரசு செய்கிறது. இது உலகுக்கே தெரியும்.
நான் நடிகையை திருமணம் செய்வதாக வாக்கு அளிக்கவில்லை. 6 மாதம் மட்டுமே பழக்கம். காதலிப்பதாக இருந்தால் இப்படி முச்சந்தியில் நிற்க வைப்பார்களா.. இது காதலா? நடிகை விரும்பியே உறவு வைத்துக் கொண்டார். பிடிக்கவில்லை. பிரிந்து போய் விட்டார். அதை யாராவது கேட்டீர்களா. என்னை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன்.
அப்பா முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று கூறினார் சீமான்.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}