யாரு பயந்தா.. கருணாநிதி, ஜெயலலிதாவை விட பெரிய தலைவரா?.. விஜய்யை மீண்டும் சீண்டும் சீமான்

Nov 12, 2024,05:25 PM IST

கன்னியாகுமரி:  ஜெயலலிதா, கருணாநிதி அவர்கள் கூட்டாத கூட்டத்தையா விஜய் கூட்டிவிட்டார். அவர்களை விட பெரியவரா.. அப்படீன்னா ஆந்திரா, கேரளாவில் போய் கட்சி ஆரம்பிக்கலாமே.. மக்களுடன் கூட்டணி வைத்துள்ள ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் விஜய் குறித்த கேள்வி இன்றும் எழுந்தது. அவரும் வழக்கம் போல பேச்சில் அனலைக் கக்கினார். சீமான் பேட்டியிலிருந்து

அவரைப் பார்த்து பயந்துட்டேன்னு சொல்றாங்க.. நானா பயந்தேன்..  ஜெயலலிதா, கருணாநிதி இருந்த காலகட்டத்தில் கட்சி தொடங்கியவன் நான். ஜெயலலிதா கருணாநிதியை விட விஜய் பெரிய தலைவரா? அவர்கள் கூட்டாத கூட்டத்தையா விஜய் கூட்டிவிட்டார்.



உங்களுக்குத்தான் எல்லாம் சமம், மொழி பாகுபாடு கிடையாது, இன பாகுபாடு கிடையாதுன்னு சொல்றீங்களே.. பிறகு கட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் என விஜய் பெயர் வைத்தது.  உலக வெற்றிக் கழகம் என வைக்க வேண்டியதுதானே. இல்லாட்டி கேரளாவில் ரசிகர்கள் இருக்காங்க, ஆந்திராவில் இருக்காங்க.. அங்கு போய் கட்சி ஆரம்பிக்க வேண்டியதுதானே.

விஜய்யால் எனது வாக்கு வங்கி பாதிக்கும் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். எனக்காவது வாக்கு வங்கி தான் குறையும், உங்களுக்கு வாக்கே கிடையாது. நான் கார்த்தி சிதம்பரத்தை போட்டிக்கு அழைக்கிறேன். எங்க ரெண்டு பேருக்குமே ஒரு தொகுதிதான். சிவகங்கைதான். ரெண்டு பேரும் போட்டி போடுவோம். ஒரு ரூபாய் கொடுக்காமல் யார் வெற்றி பெறுகிறார் என்பதை பார்ப்போம். 

கூட்டணி கண்டிப்பாக வைக்க கூடாது. நான் தனித்துப் போட்டியிட்டு ஒன்றரை லட்சம் வாக்குகள் பெற்றுள்ளேன். இன்னும் ஓராண்டு தான் இருக்கிறது. 2026 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் நான் யார் என்று தெரியும். என்னை பின்தொடர்கிற என் மக்கள் யார் என்று பாருங்கள்.பொழுதுபோக்கு தளத்தில் தலைவர்களை தேடியவர்கள் அல்ல என்னை விரும்பும் விரும்பிய மக்கள்.

என்னைப் பின் தொடரும் மக்கள் அனைவரும் போராட்ட களத்தில் தலைவரை தேடுபவர்கள். காத்தடிக்கும் திசையெல்லாம் பறக்கிற பதர்கள் எனக்கு வாக்கு செலுத்த மாட்டார்கள். புயலே அடிச்சாலும் நகராத அதே இடத்தில் இருக்கும் தூய நெல் மணிகள் தான் எனக்கு வாக்களிப்பார்கள். எனது கட்சியில் இருந்து பிற கட்சியில் சேர்ந்தவர்கள் எனக் கூறுவோர் அவர்களிடம் உள்ள நாம் தமிழர் கட்சி உறுப்பினர் அட்டையை காட்டவும். 

நாங்கள் Decent Politician இல்லை Deep Politician. மக்களுடன் கூட்டணி வைத்துள்ள ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. நாங்கள் underground வேலை செய்து வருகிறோம். நான் வேறு எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்