செந்தில் பாலாஜி செய்தது தியாகம் என்றால், நாட்டுக்காக சிறை சென்றவர்களை எதில் சேர்ப்பது.. சீமான்

Sep 26, 2024,08:12 PM IST

சென்னை: செந்தில் பாலாஜி செய்தது தியாகம் என்றால், நாட்டுக்காக சிறை சென்றவர்களை எதில் சேர்ப்பது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார்.

 

சென்னையில், இன்று சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:


நமது நாட்டில் எதுதான் பரபரப்பு இல்லை. லட்டு பரபரப்பு. ஜிலேபி பரபரப்பு. பஞ்சாமிர்தம் பரபரப்பு. ஜாமீன் கிடைப்பது பரபரப்பு. இன்று பரபரப்புக்கு பஞ்சமே இல்லை.




திருடுவது, கமிஷன் வாங்குவது, லஞ்சம் பெறுவது, டாஸ்மாக் சரக்கை கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்வது, பத்து ரூபாயை கூட்டி விற்பது, நேரம் காலம் இல்லாமல் விற்பனை செய்வது, கள்ளச் சரக்கு ஓட்டுவது இவையெல்லாம் தியாகத்தில் வருகிறது. எனவேதான் அவருடைய தியாகத்தை போற்றியுள்ளார். நாட்டின் விடுதலைக்காக, சிறையில் செக்கிழுத்தவர்கள் 9,10 ஆண்டுகளாக சிறையில் செத்து மடிந்து தூக்கில் தொங்கியவர்கள் நினைத்துதான் எனக்கு கோபம் வருகிறது. 


செந்தில் பாலாஜி பிணையில் வந்ததற்கு பெயர் தியாகம் என்றால், நம் முன்னோர்கள் செய்ததற்கு பெயர் என்ன.  இந்த நாட்டில் மணல் அள்ளி விற்பது, மலையை குடைந்து விற்பது, சாராயம் காய்ச்சுவது எல்லாம் தியாகத்தில் வருகிறது. வீர தீர செயல்களில் பெருமைமிக்க செயல்களில் இவை எல்லாம் வருகிறது. இந்த வழக்கை போட்டது யார். திமுக தொடர்ந்த வழக்கில் தான் செந்தில் பாலாஜி சிறை சென்று வந்துள்ளார். எனவே அவரை சிறைக்கு அனுப்பியவர்களும் திமுக தான். இப்போது ஜாமீனில் வரும்போது வருக வருக வீர தியாக செயல் என்று கூறுவதும் திமுக தான். 


திமுகவில் இருந்தால் தியாகம். அடுத்த கட்சியில் இருந்தால் அது ஊழல் குற்றச்சாட்டாகிவிடும். அவர் அமைச்சராக எந்த தடையும் இல்லை என்பதால், திமுக அவரை மீண்டும் அமைச்சராக்குவார்கள். யார் அதிகமாக வசூலித்து கப்பம் கட்டுகிறார்களோ அவர் தான் நல்ல அமைச்சர் அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்