இருபுறமும் காய்ந்த நிலை ஊடே மலர்வனம்…சீழ்க்கை கவிதைப் புத்தக விமர்சனம்

Oct 22, 2025,11:13 AM IST

- ஆ. உஷாதேவி


நூல் பெயர்: சீழ்க்கை

நூல் ஆசிரிய எழுத்தாளர்: விமலாதேவி


நம்மோடு பயணிக்கும் தோழி விமலாதேவி அவர்களின் கவிதை தொகுப்பு  நூல் ‘சிழ்க்கை’


‘கவிதை குவியல்’ என்றே சொல்ல வேண்டும் .அத்தனை சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் தன் சுவாரஸ்யமான கவிதை ரசனையால் சிழ்கையின் ஒலியாக வெளிப்படுத்தியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.


78 தலைப்புகளில் கவிதை படைத்திருக்கிறார் இது 100 ஆக நீண்டிருந்தால் இன்னமும் பல தலைப்புகளில் உங்களின் கவிதை மழைச்சாரல் தெறி(ரி)த்திருக்கும்…


கவி பாடி…கவிமொழியில் சொல்லும் பொழுது சொல்லப்படாத விடயங்கள் கூட அழகாக மிளிரும்.. ஒவ்வொரு கவிதை வரிகளிலும் ஏதோ ஒரு ஏக்கத்தின் சுவடு இருப்பது போலவே நான் உணர்கிறேன்.


என்னை கவர்ந்த கவிதை வரிகள்….




இருபுறமும் காய்ந்த நிலை 

ஊடே மலர்வனம்…


சிற்றின்ப ஆசையை 

பேரின்பமாக மாற்றி 

ஏகாந்த வாழ்க்கையை 

புன்னகையோடு ஏற்போம்..


"அவள்"


தன் இச்சைகளை எல்லாம் 

வேறொருவரின் இச்சைக்கு

பரிசளித்தவள்


அவளுக்கான உலகத்தை 

அவளுக்கு எந்த ஜென்மம் 

வழங்கப் போகின்றது…!?


வயோதிகம் வந்தாலென்ன 

வாழ்வது நாம் தானே…


கோப்பையில் வைத்த குழம்பி 

குளிர்ந்து விடப் போகிறதே…!

இதோ …

அதற்காகத்தான் இத்தனையும்

அப்படியே இருக்கட்டும்…

இன்றாவது

ரசித்து ருசித்து மிடறு மிடறாய்

மகிழ்ந்து பருக….

(யாருக்கென்ன நஷ்டம்…அப்படியே இருக்கட்டும் … அனைத்தும்)


"காதல் இல்லா கவிதை நூலா…"


கொதிக்கும் சூரியக் கதிரும்

இதமானது 

குளிரும் நிலவொளியும் 

வென்மையானது

தாறுமாறான தட்பவெட்பம் உன்னால் தானே….?


இருக்கிறது 

விடை இருக்கிறது…

நான் உன் மீது 

பொய்யான அன்பு காட்டினேனா…?


"வேண்டும்" 


நின்று நிதானித்து ரசித்து 

இன்புற இயற்கை எழில்..


இழுத்து நிறுத்தி சுவைத்து மகிழ 

புத்துணர்வு தரும் கோப்பை நீர்…


எல்லையில்லா சுகம் தரும் 

எவரோ எங்கோ பாடிய இசை.. 


மனநிலையை மாற்றும் வல்லமை

கொண்ட ஜன்னலோர இருக்கை.. 


மலரின் மனத்தையும் நிறத்தையும்

ரசிக்கக் கூடிய வேளைகள்.. 


சிரிக்கும் குழந்தைகளால்

சிலிர்ப்பாகும் பொழுதுகள்.. 


உண்பதும் உறங்குவதும்

உயிர் வாழ்வதற்கு தேவையென்று

அறிந்து 


இரண்டையும் நிறைவேற்ற

நேரம் ஒதுக்கும் ஒர் வாழ்க்கை

வேண்டும்…!!!

(எவ்வரிகளையும் வேண்டாம் என்று எண்ணத் தோன்றவில்லை)


"பொதுவுடமை" 


இளமைக்கு மட்டும் 

காதலை 

தனியுடமைக்காதீர்கள்..

குழவிக்கும் கிழவிக்கும்

காதல் உண்டு…

(நல்ல பொதுவுடமை கொள்கைங்க..)


நான் நிலம் 

நீ நீல வானம் 

இருவரும் 

சேர்ந்ததும் இல்லை 

பிரிந்ததும் இல்லை…

(ஆஹா… கவிதை… கவிதை)


"நிரந்தரம்"


அவள் அழகின் 

ரசிகனாக இருக்காதீர்கள்..

அவள் அன்பின் 

ரசிகனாய் மட்டும் இருங்கள்…

பந்தம் என்றும் நிரந்தரம்..!

(உண்மை தான்)


"நிர்வாணம்" 


நிர்வாணம் என்ற 

வார்த்தையை வாசித்ததுமே 

எழுதியவரின் கோலத்தை

பற்றி சிந்திப்பவர்களின் மூளை…

நிர்வாணமாய் இருப்பதற்கு

எங்கே சென்று தணிக்கை வாங்குவது..!!

(நறுக்கென்று ஒர் கேள்வி தான்…)


இறுதியாக இக்கவிதை நூலை வாசித்து முடித்ததும் நம் மனதில் சன்னமாக கேட்டுக்கொண்டே இருக்கும் சிழ்க்கை மொழி…


ஒரு ஒரு வேண்டுகோள் மட்டும்…தோழி.. 

பெண் ,காதல், அன்பு,  இதற்குள் சுருக்கிக்கொள்ள கூடாது உங்களின் கவிதையின் ஆழ் அறிவை…  பல்வேறுப்பட்ட தலைப்புகளை நோக்கி சற்று சிறகை விரிக்கட்டும்…


(எழுத்தாளர் ஆ.உஷாதேவி, இடைநிலை ஆசிரியர். தஞ்சாவூரைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தொடர் மழையால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி:ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்:அன்புமணி

news

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 குறைவு!

news

மகாலட்சுமி முகம் கொண்ட மங்கலா.. மீண்டும் மங்கலம் (5)

news

குருவிக்கூடு!

news

காற்றின் மொழி!

news

அரபிக் கடல்.. வங்கக் கடல்.. 2 தாழ்வுகள்.. லேட்டஸ்ட் நிலவரம் என்ன.. மழை எப்படி இருக்கும்?

news

இருபுறமும் காய்ந்த நிலை ஊடே மலர்வனம்…சீழ்க்கை கவிதைப் புத்தக விமர்சனம்

news

கந்தன் அருள் இருந்தால் துன்பம்.. வந்த வழி ஓடி விடும்.. கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்!

news

கன மழை எதிரொலி.. சென்னை உள்பட பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. புதுவையிலும் விடுமுறை அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்