மதுரை: மதுரை காளவாசலில் பூமி பூஜை விழாவில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காங்கிரசை கட்டிக் காத்த ராகுல் காந்திக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என புகழாரம் சூட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மதுரை காளவாசலில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக புதிய கட்டிட இ-சேவை மையத்தின் பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில்,

மக்களின் நலனுக்காக மதுரை மேற்கு தொகுதியில் 21 லட்சம் மதிப்பில் இ சேவை மையம் அமைக்கப்பட உள்ளது. இங்கு பிறப்பு இறப்பு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக பொதுப்பணித்துறை உபகரணங்களை வழங்க உள்ளது.விரைவில் இந்த இ சேவை மையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
திமுகவினர் வெற்றி பெற்ற ஆவணத்தில் பேசுகிறார்கள். எந்தக் கூட்டணியும் இல்லாமல் திமுக தனித்து நிற்க தயாரா.. அதிமுக போல் திமுக தனித்து நின்று அவரவர் திறமையை, செல்வாக்கை காண்பிக்கட்டும்.. மக்களிடத்தில் உங்கள் சாதனையை சொல்லி சந்திக்க தயாரா..ஜெயலலிதா போன்று ஆணித்தரமான முடிவுவெடுக்க இன்றைய முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலினும், திமுக தலைவர்களும் முடிவெடுப்பார்களா.
அதிமுகவுக்கும் பாஜகவும் ஒட்டுமல்லை உறவு இல்லை. இந்த தேர்தலை அதிமுக எதற்காக புறக்கணிக்கிறது என்பதை அதிமுக பொதுச்செயலாளரும் நானும் கூறிவிட்டோம். பாமகவிற்கு மக்களிடம் எந்தளவிற்கு செல்வாக்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள பாமக இடைத்தேர்தலில் போட்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியை கட்டிக் காக்க வேண்டும் என்ற ராகுல் காந்தியின் விடாமுயற்சி பாராட்டுக்குரியது. மாற்றன் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு. அதற்காக பக்கத்து வீட்டு தோட்டத்து மல்லிகைக்கு மனம் இல்லை என கூற முடியுமா. அதனால் காங்கிரசை கட்டிக் காத்த ராகுல் காந்திக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறினார்.
சமீபத்தில் ராகுல் காந்தி உணவருந்தும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி என பாராட்டி ட்விட் செய்திருந்தார் செல்லூர் ராஜு. அதிமுகவுக்கும், திமுகவும் எதிரணியாக களத்தில் உள்ள நிலையில் செல்லூர் ராஜு இதுபோல் காங்கிரஸ் கட்சி தலைவரை புகழ்ந்து பேசியது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதுகுறித்து பலரும் தங்களின் கருத்துக்களை சமூக வளைய தளங்களில் பதிவிட்டு வந்த நிலையில் செல்லூர் ராஜு அந்தப் பதிவை நீக்கிவிட்டார் என்பது நினைவிருக்கலாம்.
பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
{{comments.comment}}