சென்னை: திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடியான மற்றும் உருக்கமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மோடியின் வித்தைகள் தமிழகத்தில் பலிக்காது :
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ள செல்வப்பெருந்தகை, "எந்த மாயாஜாலம் செய்தாவது வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், தமிழக மக்கள் முன்னிலையில் எந்த வித்தையும் எடுபடாது" என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் பேசுகையில், "எந்த விதமான மாயாஜாலங்கள் செய்தாலும், எத்தனை 'மோடி மஸ்தான்' வித்தைகளைக் காட்டினாலும், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தான் அமோக வெற்றி பெறும். வரும் தேர்தலில் 210-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் எங்களது கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.பாஜகவின் தேர்தல் வியூகங்கள் தமிழகத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதை இவரது பேச்சு பிரதிபலிக்கிறது.
தோழமைக் கட்சிகளுக்கு வேண்டுகோள் :

மற்றொரு புறம், திமுக கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு குறித்து செல்வப்பெருந்தகை மிகுந்த மனவேதனையுடனும், யதார்த்தத்துடனும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். காங்கிரஸ் கட்சி ஒரு காலத்தில் தமிழகத்தில் 110 தொகுதிகளில் போட்டியிட்டதை நினைவுகூர்ந்த அவர், தற்போது கட்சியின் நிலை குறித்து உருக்கமாகப் பேசினார். செல்வப்பெருந்தகை கூறுகையில், "ஒரு காலத்தில் 110 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், தற்போது வெறும் 28 இடங்களில்தான் போட்டியிடுகிறோம். காங்கிரஸ் கட்சியை தங்களுடன் ஒப்பிட்டு தொகுதிகளைக் கேட்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். எங்களது இந்த அரசியல் வலியை (வேதனையை) தோழமைக் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
திமுக கூட்டணியில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தான் இரட்டை இலக்கத்தில், அதாவது 28 சீட்களை திமுக தலைமை ஒதுக்கி உள்ளது. அதுவும் நீண்ட நாள் போராட்டம், பேச்சுவார்த்தைக்கு பிறகு தான் திமுக இந்த சீட்டை ஒதுக்கி உள்ளது. கடந்த முறை பெற்ற 25 சீட்டுகளை விட இந்த முறை கூடுதலாக 3 சீட்டுகளை காங்கிரஸ் பெற்றுள்ளது. காங்கிரஸ் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஒற்றை இலக்கத்திலேயே தொகுதிகளை பெற்றுள்ளன. இருந்தாலும் கடந்த முறை வாங்கிய தொகுதிகளில் இருந்து கூடுதலாக ஒன்றிரண்டு சீட்டுகளை கேட்டு பெற்று வருகின்றன.
விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தொடர்ந்து இரட்டை இலக்க தொகுதிகளை தான் கேட்டு பெறுவோம் என தொடர்ந்து கூறி வருகின்றன. இதனால் ஒவ்வொரு கட்சிகளுடனும் பல கட்டங்களாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் கையெழுத்திடும் நிலையில் திமுக தலைமை உள்ளது. பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்ட நிலையில் இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு எத்தனை சீட் என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
உன் அடி மனதுக் காதல்.. I know, your love is deep and true
எந்த சின்னத்தில் போட்டி? திமுக-மக்கள் நீதி மய்யம் இடையே தொடரும் இழுபறி
கோடை விடுமுறை: 50 சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே
கிடைக்காதவற்றை நேசிக்காதே மனமே.. Dear feelings, Please stop!
சிரிப்பு வருதா.. சிரிங்க பாஸ்.. நல்லா வாய் விட்டு சிரிங்க.. உடம்புக்கு நல்லது!
உலகம் அப்படியேதான் இருக்கிறது.. No, The World Is Not broken
20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு
எங்களுடன் ஒப்பிட்டு தொகுதி கேட்காதீங்க...செல்வ பெருந்தகை வேண்டுகோள்
ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது - நயினார் நாகேந்திரன் அதிரடி
{{comments.comment}}