சென்னை: தமிழ்நாட்டில் கோடைகாலம் ஆரம்பிக்கும் முன்பே, வெயில் வாட்டி வதைக்கிறது. எனவே, எளிதில் தீப்பற்ற கூடிய பட்டாசு ஆலை, பெட்ரோல், டீசல் பங்குகள், கேஸ் பங்குகள் ஆகியவை பாதுகாப்பாகவும் முறையாக இயங்குகிறதா எனவும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ஆந்திரா மாநிலம், காகிநாடா அருகில் உள்ள வேட்டப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சூரிய ஸ்ரீ என்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 20 நபர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். பலர் படுகாயம் அடைந்துள்ள செய்தியும் வந்து கொண்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன்.

பட்டாசு ஆலைகள், கிடங்குகளிலும் அடிக்கடி வெடி விபத்துக்கள் நடைபெறுவதும், அதில் தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர் கதையாகியுள்ளது. இவ்வாறான வெடி விபத்துகள் உடனடியாக தடுக்கப்படவேண்டும்.
பட்டாசு ஆலைகளிலும், அவை பாதுகாத்து வைக்கப்படும் கிடங்குகளிலும் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாதது மிகப்பெரிய குறையாக இருக்கிறது. இந்தக் குறைகளை நிவர்த்தி செய்து இனி வரும் காலங்களில் வெடி விபத்தே இல்லாத மாநிலமாக உருவாக்கிட ஆந்திரா அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், தொழிலாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததும் இத்தகைய கோர விபத்துகள் ஏற்பட காரணமாகிறது.
தமிழ்நாட்டில் கோடைகாலம் ஆரம்பிக்கும் முன்பே, வெயில் வாட்டி வதைக்கிறது. எனவே, எளிதில் தீப்பற்ற கூடிய பட்டாசு ஆலை, பெட்ரோல், டீசல் பங்குகள், கேஸ் பங்குகள் ஆகியவை பாதுகாப்பாகவும் முறையாக இயங்குகிறதா எனவும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}