சென்னை: விஜய் படங்களின் டிக்கெட் விலை என்ன? பாமர மக்களுக்காக நடிக்கிறேன். குறைந்த விலையிலோ இலவசமாகவோ டிக்கெட் கொடுக்கிறேன் என இருக்க வேண்டியதுதானே? என்று விஜய்யின் அறிக்கைக்கு பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், விஜய் படங்களின் டிக்கெட் விலை என்ன? பாமர மக்களுக்காக நடிக்கிறேன். குறைந்த விலையிலோ இலவசமாகவோ டிக்கெட் கொடுக்கிறேன் என இருக்க வேண்டியதுதானே? யார் தடுத்தார்கள்? உங்களுக்கு லாபமென்றால் பேசமாட்டீர்களா? ஒன்றும் தெரியாமல் விஜய் போன்றோர் பேச வேண்டாம். விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும், வசனம் பேசவும், நடனமாடவும் ஏமாற்றவும் தான் தெரியும். அரசியலோ பொருளாதாரமோ தெரியாது.
கேஸ் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டதை திரும்ப்பபெறுமாறு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதவிருக்கிறோம். சர்வதேச சந்தையில் 60 சதவிகிதத்துக்கு மேல் கேஸ் விலை ஏற்றம் செய்யப்பட்டதால், இந்த விலையேற்றம் நிகழ்ந்துள்ளது. அதோடு ஒப்பிடுகையில் இந்த கேஸ் விலையேற்றம் மிக மிக குறைவானதே. இருப்பினும் விலையை குறைக்க வலியுறுத்துவோம்.
பிரதமர் மோடி ஒன்று செய்தார் என்றால் பொத்தாம் பொதுவாக செய்யமாட்டார். மகளிர் தினத்தில் மகளிர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கேஸ் விலை ரூ.100 குறைத்தார். சர்வதேச சந்தையில் 62 சதவிகிதத்துக்கு மேல் கேஸ் விலை ஏற்றமடைந்ததால் இன்று மிகக்குறைந்த அளவே ஏற்றியிருக்கிறார். ஆனால், அந்த விலையேற்றமும் வேண்டாம் என்று நாங்கள் கோரிக்கை வைக்க இருக்கிறோம் என்று பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
ஐங்கரன் (நெடுங்கதை)
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
{{comments.comment}}