சென்னை: திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி அவரது வீட்டில் சோதனை செய்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஜூன் 21 ம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த செந்தில் பாலாஜி உடல்நிலை சீரானதும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி சிறை டாக்டர்களின் கண்காணிப்பிலேயே தனி அறையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் அவ்வப்போது பரிசோதித்து வந்தனர். இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடநிலை பாதிக்கபட்டது. இந்த தகவல் அறிந்த புழல்சிறை காவலர்கள் அவரது நிலையை பார்த்து தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர் செந்தில் பாலாஜிக்கு ரத்த ஓட்டம் சரியில்லாமல் இருப்பதை கண்டுபிடித்தனர். ரத்த ஓட்டம் சரியாவதற்கான சிகிச்சைகளை டாக்டர் தற்பொழுது அளித்து வருகின்றனர். அனைத்து பரிசோதனைகளும் முடிவடைந்த பின்னரே இவரை புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.
செந்தில் பாலாஜி மீது இருக்கும் வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏ. வை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் இவரது வழக்கு வருகின்ற அக்டோபர் 31ம் தேதி மறுவிசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}