பிரிட்டோரியா: தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில் தமிழர் ஒருவர் இடம் பிடித்துள்ளார். அவரது பெயர் சேனூரான் முத்துசாமி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025க்கான தென் ஆப்பிரிக்க அணியில் இவருக்கு இடம் கிடைத்துள்ளது.
31 வயதான சேனூரான் முத்துசாமி, ஆல் ரவுண்டர் ஆவார். இடது கை பேட்ஸ்மேன் ஆன அவர் இடது கை ஆர்த்தோடாக்ஸ் பந்து வீச்சாளரும் ஆவார். டர்பனில் பிறந்தவரான சேனூரான் முத்துசாமி, உள்ளூரில் பல்வேறு அணிகளில் இடம் பிடித்து விளையாடியுள்ளார். 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 245 ரன்களை எடுத்துள்ளார். 7 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். 2 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள சேனூரான் அதில் 67 ரன்களையும், 2 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.
2019ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஆந்திராவில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் சேனூரான் முத்துசாமி. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ள சேனூரான் முத்துசாமி, டெஸ்ட் போட்டிகளில் இதுவரை பெரிய அளவில் சோபித்ததில்லை. இந்த நிலையில் மீண்டும் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி முழு விவரம்:

டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்காம், கார்பின் பாஸ்ச், டோனி டி ஜோர்சி, மார்கே ஜென்சேன், கேஷவ் மகாராஜ், அய்டன் மார்க்ரம், வியான் முல்டர், சேனூரான் முத்துசாமி, லுங்கி அங்கிடி, டேன் பேட்டர்சன், காகிசோ ரபடா, ரியான் ரிக்கிள்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரியன்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}