சென்னை: சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை நேற்று வெளுத்து வாங்கிய மழை செப்டம்பர் மாதம் முழுவதும் தினசரி நீடிக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வட தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. மாலைக்கு மேல் பலத்த இடி மின்னலுடன் காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. ராணிப்பேட்டை முதல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதேபோல இரவிலும் நல்ல மழை இருந்தது.
திருவள்ளூர், விழுப்புரம், வட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் 100 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த மழை இந்த மாதம் முழுவதும் நீடிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள லேட்டஸ்ட் டிவீட்டில், சென்னை மற்றும் வட தமிழ்நாடு முழுவதிலும் செப்டம்பர் மாதம் வரலாறு படைக்கப் போகிறது. இந்த மாதம் முழுவதும் தினசரி அடிப்படையில் மழையை எதிர்பார்க்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று வட தமிழ்நாடு மட்டுமல்லாமல், கடலூர், காவிரி டெல்டா, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெப்பமும், புழுக்கமும் நிலவி வந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள், கால்வாய் தோண்டும் பணிகள் தொடர்ந்து கொண்டிருப்பதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்று மக்களை சிரமப்படுத்துகிறது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வட கிழக்கு பருவ காலம் வேகமாக நெருங்கி வருவதாலும், இப்போதே மழை பெய்யத் தொடங்கி விட்டதாலும் இதில் அரசு போர்க்கால நடவடிக்கையில் இறங்க வேண்டியது அவசியமாகும்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}