சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் "மதராஸி" படத்தில் முதலில் ஷாருக் கான்தான் நடிப்பதா இருந்ததாம். இதை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூறியுள்ளார்.
முதலில் இந்த கதையை ஷாருக் கானுக்காகத்தான் முருகதாஸ் யோசித்தார். ஆனால், பிறகு அந்தக் கதையில் சிவகார்த்திகேயன் வந்து சேர்ந்தாராம்.
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மதராஸி படம் குறித்து தொடர்ந்து பேட்டிகள் அளித்து வருகிறார். அப்படி ஒரு சானலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஷாருக் கானை மனதில் வைத்து நான் முழு படத்தையும் உருவாக்கவில்லை. ஆனால், ஒரு கதாபாத்திரத்தை பற்றி அவரிடம் சொன்னேன். இது ஏழு அல்லது எட்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது. அவருக்கும் அது பிடித்திருந்தது.
அப்போது என்னிடம் முழு கதையும் இல்லை. வெறும் கதாபாத்திரத்தின் ஐடியா மட்டுமே இருந்தது. அது ஒரு ஐடியா தான். முழு ஸ்கிரிப்ட் இல்லை. மதராஸி படம் பார்த்த பிறகு, நான் என்ன கதாபாத்திரத்தை பற்றி சொன்னேன் என்று உங்களுக்கு புரியும். ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் ஷாருக் கானுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். ஷாருக் கான் ரொம்ப அன்பாக, உற்சாகமாக பேசினார். நிச்சயமாக நாம் இந்த படத்தை பண்ணலாம் என்றும் சொன்னார். ஆனால், போகப்போக அந்த திட்டம் தள்ளிப்போனது. அது நடக்காமலே போய்விட்டது என்றார் முருகதாஸ்.
இப்படித்தான் மதராஸி படத்தில் ஷாருக் கான் நீங்கி, சிவகார்த்திகேயன் வந்துள்ளார். சரி, ஷாருக் கான் நடிப்பதாக இருந்த பாத்திரம் எதுவாக இருக்கும். படம் வரட்டும் பார்த்து மகிழ்வோம்.
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
செவிலியர் சிறப்பு!
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி
10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!
நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்
{{comments.comment}}